அடுத்த ஆண்டு ரூ.4 லட்சத்திற்குள் புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்த ரெனோ திட்டம்!

By Saravana

அடுத்த ஆண்டு ரூ.4 லட்சம் விலையிலான புதிய காரை அறிமுகம் செய்ய ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய மார்க்கெட்டில் பங்களிப்பை உயர்த்துவதற்கான புதிய திட்டத்தை ரெனோ அறிவித்துள்ளது. இதற்காக, புதிய குட்டிக் காரை களமிறக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Renault Twins

இதுதொடர்பாக கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷானி கூறியதாவது," இந்திய கார் மார்க்கெட்டில் தற்போது 2.6 சதவீத மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கிறோம்.

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் எங்களது மார்க்கெட் பங்களிப்பை 5 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். இதற்காக, ரூ.4 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட புதிய கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.

அடுத்த ஆண்டு இந்த புதிய கார் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், எங்களது மார்க்கெட் பங்களிப்புக்கா வைக்கப்பட்டிருக்கும் இலக்கை நிச்சயம் எட்டிவிட முடியும் என்று நம்புகிறோம்.

மேலும், எங்களது நிதி அமைப்பு மூலம் டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன் திட்டங்களை வழங்குவதற்கான திட்டமும் உள்ளது," என்று கூறினார்.

Most Read Articles
Story first published: Saturday, March 15, 2014, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X