சென்னை ஆலையில் லாட்ஜி எம்பிவி உற்பத்தி: ரெனோ பச்சைக் கொடி

By Saravana

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரெனோ லாட்ஜி எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதனை ரெனோ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மார்க்கெட்டில் டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய எம்பிவி கார் ரெனோ பிராண்டில் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எம்பிவி கார் காட்சிக்கு வைக்கப்படவில்லை. இருப்பினும், சென்னை ஒரகடம் ஆலையில் இந்த புதிய எம்பிவி காரின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் முதல் இந்த புதிய காரின் உற்பத்தியை துவங்குவதற்கு ரெனோ தலைமையகம் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியாளர்

போட்டியாளர்

மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார்களுக்கு இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி கார் போட்டியாக இருக்கும். இந்த கார் மாருதி எர்டிகாவை விட கூடுதல் நீளம் கொண்டது என்பதால், கேபினில் அதிக இடவசதியுடன், பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூமும் அதிக கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

முதலில் 85 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கடுத்து, 105 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறதாம். பெட்ரோல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் கொண்டதாக இருக்கும்.

உதிரிபாகங்கள்

உதிரிபாகங்கள்

எஞ்சின் மட்டுமின்றி, டஸ்ட்டர் எஸ்யூவியின் பெரும்பாலான உதிரிபாகங்களை இந்த எம்பிவி காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்கள் பெறுவது எளிதாக இருக்கும்.

 விலை

விலை

ரூ.8 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் டிசம்பரில் உற்பத்தி துவங்கப்பட இருக்கும் இந்த புதிய எம்பிவி கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
French Car maker Renault is planning to launch the Lodgy MPV in India by early Next year.
Story first published: Saturday, February 8, 2014, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X