லிமிடேட் எடிசன் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் அறிமுகம்!

By Saravana

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே மாடலின் லிமிடேட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1937ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் சர் மால்கன் கேம்பல் என்பவர் ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின் பொருத்தப்பட்ட புளூபேர்டு கே3 படகை அதிவேகத்தில் செலுத்தி உலக சாதனை படைத்தார்.

இத்தாலியிலுள்ள மேகியோர் ஏரியில் முதல்முறையில் மணிக்கு 203 கிமீ வேகத்திலும், பின்னர் மணிக்கு 208 கிமீ வேகத்திலும் படகில் பறந்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை நினைவுகூறும் விதத்தில்தான் இந்த புதிய லிமிடேட் எடிசன் காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், வாட்டர்ஸ்பீடு கலெக்ஷன் என்ற பெயரில் இந்த லிமிடேட் எடிசன் வந்துள்ளது.


அறிமுகம்

அறிமுகம்

கடந்த 13ந் தேதி லண்டனில் படகை தயாரித்த புளூபேர்டு நிறுவனம் அமைந்திருந்த இடத்தில் நடந்த விழாவில் இந்த லிமிடேட் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் புளூபேர்டு ரெஸ்ட்டாரண்ட் செயல்பட்டு வருகிறது.

 ஸ்பெஷல் வண்ணம்

ஸ்பெஷல் வண்ணம்

ஃபான்டம் டிராப்ஹெட் கூபே காரின் வாட்டர்ஸ்பீடு கலெக்ஷன் மாடல் ஏரியின் நீல நிற தண்ணீரை நினைவூட்டும் வகையில், பிரத்யேகமான நீல வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புளூபேர்டு நிறுவனத்தின் பிரத்யேக வண்ணமும் கூட. காரின் பாடி மட்டுமின்றி, வீல்கள் மற்றும் எஞ்சினிலும் இதே வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 அனுமதி

அனுமதி

சாதனை நாயகன் கேம்பலின் பேரனிடம் சிறப்பு அனுமதி பெற்று மொத்தம் 35 கார்களை லிமிடேட் எடிசனாக ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்ய உள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

புளூபேர்டு கே3 படகை பிரதிபலிக்கும் விதத்திலேயே டேஷ்போர்டின் டிசைன் அம்சங்கள் உள்ளன.

 இன்டிரியர்

இன்டிரியர்

மேகியோர் ஏரியின் தண்ணீர் நிறம் இன்டிரியரின் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. ஸ்டீயரிங் வீல், கப் ஹோல்டர்கள் ஆகியவற்றை பார்த்தால் தெரியும். முதன்முறையாக ஸ்டீயரிங் வீலில் இரட்டை வண்ணக்கலவை கொடுக்கப்பட்டுள்ளது.

 பிரதிபலிக்கும் அம்சங்கள்

பிரதிபலிக்கும் அம்சங்கள்

கதவுகளிலும், ஆர்ம்ரெஸ்ட்டிலும் புளூபேர்டை நினைவூட்டும் வகையில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 சாதனை விபரம்

சாதனை விபரம்

கிளவ் பாக்ஸ் மூடியின் உட்புறத்தில் கேம்பல்லின் சாதனை குறித்த தகவல்கள் பொறித்தப்பட்டிருப்பதை காணலாம்.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

டாக்கோமீட்டருக்கு பதிலாக ஃபான்டம் காரில் கொடுக்கப்படும் பவர் ரிசர்வ் டயல் புளூபேர்டு படகின் டேஷ்போர்டை நினைவூட்டுவதாக இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

முதல்முறையாக எஞ்சினில் இரட்டை வண்ணத்தை கொடுத்து அசத்தியுள்ளது ரோல்ஸ்ராய்ஸ். இந்த காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 453 எச்பி பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

Most Read Articles
English summary
The successful record attempt by Campbell was made on Lake Maggiore, on September 1, 1937 by reaching a top speed of 203 km/h. Campbell later went on to surpass that by hitting 208 km/h. To commemorate Campbell's achievement using a Rolls Royce engined boat, the luxury car maker has brought out a limited edition Phantom Drophead Coupe, called Phantom Drophead Coupe Waterspeed Collection.
Story first published: Wednesday, May 14, 2014, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X