அடுத்த மாதம் முதல் பெங்களூர் ஆலையில் பஸ் உற்பத்தி: ஸ்கானியா

By Saravana

அடுத்த மாதம் முதல் பெங்களூர் அருகே அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் பஸ் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக ஸ்கானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த சொகுசு பஸ் தயாரிப்பு நிறுவனமான ஸ்கானியா இந்திய பஸ் மார்க்கெட்டில் கால் பதித்துள்ளது. இதற்காக, பெங்களூர் அருகே நரசப்பூரில் ரூ.300 கோடி முதலீட்டில் புதிய பஸ் அசெம்பிளிங் ஆலையை அமைத்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த புதிய ஆலையில் பஸ் அசெம்பிளிங் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Scania Bus

இதுகுறித்து ஸ்கானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன்டர்ஸ் கிரண்ட்ஸ்டோமர் கூறுகையில்," ஆகஸ்ட் முதல் இந்தியாவில் பஸ் உற்பத்தி துவங்க உள்ளோம். மெட்ரோலிங்க் பிராண்டில் வரும் இந்த புதிய பஸ்கள் 13.7 மீட்டர் மற்றும் 14.5 மீட்டர் நீளம் கொண்ட அளவுகள் கொண்டதாக இருக்கும்.

சேஸீயை பொறுத்தவரையில் 30 சதவீத உள்நாட்டு சப்ளையை பெறுகிறோம். பாடி கட்டுமானம் முழுக்க முழுக்க இந்திய உதிரிபாகங்கள் மூலம் கட்டமைக்கப்படும். நடப்பு ஆண்டில் 150 பஸ்களையும், அடுத்த ஆண்டு 450 பஸ்களையும் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார்.

பெங்களூரை சேர்ந்த பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு புதிய ஸ்கானியா பஸ்கள் வழங்கும் நிகழ்ச்சியில்தான் இந்த தகவல்களை ஆன்டர்ஸ் கூறினார். புதிய ஸ்கானியா பஸ்களை சென்னை மற்றும் கொச்சி நகரங்களுக்கு இயக்க இருப்பதாக பர்வீன் டிராவல்ஸ் தெரிவித்துள்ளது. ஸ்கானியாவின் வருகை வால்வோ நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Sweden Luxury bus maker Scania is all set to begin bus production in India by next month at its Rs 300-crore manufacturing facility situated near Bangalore, a top official said today. 
Story first published: Friday, July 18, 2014, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X