டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனுடன் வரும் ஸ்கோடா ரேபிட் டீசல்!

By Saravana

அடுத்த ஆண்டு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்ட ஸ்கோடா ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. எஞ்சினிலும், டிசைனிலும் மாற்றங்களுடன் வர இருக்ககிறது.

டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், அதிக எரிபொருள் சிக்கனம், மிக மென்மையான ஓட்டுதல் சுகத்தை வழங்கும் என்பதால் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரும் ஸ்கோடா ரேபிட் டீசல் கார் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Skoda Rapid

தற்போது ஸ்கோடா ரேபிட் காரில் 153 எச்பி பவரையும், 153 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 153 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் எஞ்சினுடன் கிடைக்கிறது.

இந்த நிலையில், 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ரேபிட் காரை அறிமுகம் செய்யவும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. மறுபக்கம் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போ எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய எஞ்சின்கள் மற்றும் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்டதாக ஸ்கோடா ரேபிட் கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்கள் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமாகிவிட்டன.

தற்போது ஸ்கோடா ரேபிட் பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இதனைவிட மிகச்சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், மென்மையையும் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The new Skoda Rapid for 2015 will be not only more fuel efficient, but will also be more convenient to drive, thanks to introduction of DSG automatic gearbox.
Story first published: Thursday, May 15, 2014, 18:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X