ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(AMT) பற்றி சில விஷயங்கள்!

By Saravana

ஆட்டோமேட்டிக் கார்களுக்கு மாற்றான ஓர் புதிய டிரென்ட்டை ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(AMT) கொண்ட கார்கள் உருவாக்கி வருகின்றன. செலிரியோ, ஆல்ட்டோ கே10 மற்றும் ஸெஸ்ட் போன்ற கார்களின் ஏஎம்டி., மாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தற்போது ஏஎம்டி மாடல்களை அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஓர் முழுமையான தானியங்கி கியர்பாக்ஸ் இல்லை என்பதையும், இந்த கியர்பாக்ஸ் பற்றிய சில முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.


1. இருக்கு, ஆனா இல்லை.

1. இருக்கு, ஆனா இல்லை.

ஏஎம்டி கார்களில் கிளட்ச் உண்டு. ஆனால், கிளட்ச் பெடல் மட்டுமே இருக்காது. இதனால், போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ஆட்டோமேட்டிக் கார்களை போன்று வெகு எளிதாக ஓட்டிச் செல்லலாம்.

2. மலிவு விலை

2. மலிவு விலை

வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் விலை அதிகம் என்பதும் வரவேற்பு பெறாததற்கு காரணம். ஆனால், ஏஎம்டி கியர்பாக்ஸ் கிட்டின் விலை மிக குறைவானது. எனவே, 1986க்கு முன்பு வரை ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்கள் ரேஸ் கார்களில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை பயன்படுத்தின.

தொழில்நுட்பம் எளிது

தொழில்நுட்பம் எளிது

எந்தவொரு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸை சிறிய மாறுதல்களை செய்து எளிதாக பொருத்திவிட முடியும்.

4. பாகங்கள்

4. பாகங்கள்

ஹைட்ராலிக் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் ஆகிய இரு முக்கிய பாகங்களை ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

 5. செயல்பாடு

5. செயல்பாடு

வேகத்துக்கு தகுந்தவாறு ஓட்டுனர் கிளட்ச்சை இயக்கும் வேலையைத்தான் இந்த ஏஎம்டி செய்கிறது. இது கிளட்ச் மற்றும் கியரை வேகத்துக்கு தகுந்தவாறு எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் கண்காணித்து ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் கியர்களை கூட்டிக் குறைப்பதுடன், அதற்கு ஏற்றாற்போல் கிளட்ச்சையும் இயக்கும்.

6. வரப்பிரசாதம்

6. வரப்பிரசாதம்

தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்துவதற்கு காரில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஏஎம்டி கியர்பாக்ஸை காரில் பொருத்துவது மிக எளிது என்பதே கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதற்கு மிக முக்கிய காரணம்.

7. வளர்ச்சி

7. வளர்ச்சி

2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனையாகும் 20 சதவீத கார்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும் என இத்தாலியை சேர்ந்த மேக்னட்டி மரெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 மற்றும் டாடா ஸெஸ்ட் கார்களுக்கு இந்த நிறுவனம்தான் ஏஎம்டி கியர்பாக்ஸ்களை சப்ளை செய்கிறது.

 8. மைலேஜ்

8. மைலேஜ்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் 10 சதவீதம் வரை மைலேஜ் குறைவாக இருக்கின்றன. ஆனால், ஏஎம்டி கார்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு இணையான மைலேஜை வழங்கும்.

9. விலை

9. விலை

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட ஆட்டோமேட்டிக் கார்கள் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை மட்டுமே விலை அதிகம். ஆனால், ஆட்டோமேட்டிக் கார்கள் ரூ.80,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை கூடுதல் விலை கொண்டதாக இருக்கின்றன. எனவே, ஏஎம்டி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதலீடு வெகுவாக குறைகிறது.

10.பராமரிப்பு செலவு

10.பராமரிப்பு செலவு

ஆட்டோமேட்டிக் கார்கள் மைலேஜ் குறைவு, விலை அதிகம் என்பதோடு, பராமரிப்பு செலவும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், ஏஎம்டி கார்களின் பராமரிப்பு செலவும் மிக குறைவாக இருக்கும்.

Most Read Articles
English summary
Here are some interesting things you should know about Automated Manual Transmission(AMT).
Story first published: Monday, November 10, 2014, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X