சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!
சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புனேயில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆர்எக்ஸ்6 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஆர்எக்ஸ்5 மற்றும் ஆர்எக்ஸ்7 ஆகிய வேரியண்ட்டுகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ்7 டாப் வேரியண்ட்டின் வசதிகளையும், ஆர்எக்ஸ்5 வேரியண்ட்டின் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது.
கவரும் அம்சங்கள்
கவரும் அம்சங்கள்
அதிக வசதிகளுடன் கூடிய மிட் வேரியண்ட்டை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த புதிய வேரியண்ட்டை சாங்யாங் - மஹிந்திரா கூட்டணி அறிமுகம் செய்துள்ளது. சிறப்பம்சங்கள், எஞ்சின், விலை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.
எஞ்சின்
எஞ்சின்
ஆர்எக்ஸ்5 வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.7 லிட்டர் 5 சிலிண்டர் எஞ்சின்தான் இந்த வேரியண்ட்டிலும் உள்ளது. இந்த எஞ்சின் 162 பிஎச்பி ஆற்றலையும், 340 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த எஞ்சின் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது.
டிரான்ஸ்மிஷன்
டிரான்ஸ்மிஷன்
இந்த புதிய வேரியண்ட்டில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருக்கிறது. இந்த டிரான்ஸ்மிஷன் 4 சக்கரங்களுக்கும் ஆற்றலை கடத்தும்.
சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், பிரிமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி, மெமரி வசதியுடன் 8 வே எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் இருக்கைகள், எலக்ட்ரிக் சன் ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், நேவிகேஷனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ், ஹில் டிசென்ட் மற்றும் ஹில் அசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வந்துள்ளது.
விலை
விலை
சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ஆர்எக்ஸ்5 பேஸ் வேரியண்ட் ரூ.18.87 லட்சத்திலும், ஆர்எக்ஸ்7 டாப் வேரியண்ட் ரூ.21.11 லட்சத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆர்எக்ஸ்6 மிட் வேரியண்ட் ரூ.19.96 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஃபேஸ்புக் வீடியோ: காணத்தவறாதீர்!
Post by DriveSpark Tamil.
Most Read Articles
English summary
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X