பீஜிங் ஆட்டோ ஷோவில் புதிய 7 சீட்டர் சாங்யாங் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்
By Saravana
அடுத்த ஆண்டு புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக மஹிந்திரா கீழ் செயல்படும் சாங்யாங் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பீஜிங் மோட்டார் ஷோவில் எக்ஸ்100 கான்செப்ட்டின் 7 சீட்டர் மாடலாக எக்ஸ்எல்வி என்ற புதிய மாடலை சாங்யாங் காட்சிக்கு வைத்திருந்தது.
இந்த எஸ்யூவி கான்செப்ட் அறிமுகத்தின்போது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக சாங்யாங் அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். இதன் அடிப்படையிலான மாடல் இந்தியா வரும் என்பதால் இந்திய ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை இந்த எக்ஸ்எல்வி கான்செப்ட் ஈர்த்தது. இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் கொடுத்துள்ளோம்.
7 சீட்டர் எஸ்யூவி மாடல்
7 சீட்டர் எஸ்யூவி மாடல்
முன்பு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்100 காம்பெக்ட் எஸ்யூவி கான்செப்ட் 5 சீட்டர் மாடல். இதன் 7 சீட்டர் மாடல்தான் பீஜிங் ஆட்டோ ஷோவில் எக்ஸ்எல்வி கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது.
எக்ஸ்எல்வி கான்செப்ட்
எக்ஸ்எல்வி கான்செப்ட்
அடுத்த ஆண்டு துவக்கத்தில் 5 சீட்டர் மாடலான எக்ஸ்100 அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட், நிசான் ஜூக், ரெனோ டஸ்ட்டருடன் இந்த 5 சீட்டர் மாடல் போட்டிபோடும். இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இறுதியில் எக்ஸ்எல்வி கான்செப்ட் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இருக்கை அமைப்பு
இருக்கை அமைப்பு
இந்த எக்ஸ்எல்வி கான்செப்ட் எஸ்யூவியில் 2+2+2+1 என்ற புதிய அமைப்பிலான இருக்கை வசதியுடன் வருகிறது. இதன் கடைசி வரிசையில் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் இருக்கையை, இரண்டாவது வரிசைக்கும், மூன்றாவது வரிசைக்கும் இடையில் நகர்த்திக் கொள்ள முடியும்.
வடிவம்
வடிவம்
இந்த எஸ்யூவி 4,430 மிமீ நீளமும், 1,845 மிமீ அகலமும், 1,600மிமீ உயரமும் கொண்டது. இந்த எக்ஸ்எல்வி எஸ்யூவி 2,600 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது.
ஹைபிரிட் மாடல்
ஹைபிரிட் மாடல்
பீஜிங் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எக்ஸ்எல்வி கான்செப்ட் மாடலில் 48V ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. இது 10kW எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டது. மேலும், 500வாட் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இது போட்டியாளர்களைவிட 10 சதவீதம் குறைவான கார்பனை வெளிப்படுத்தும் சிறப்பம்சம் கொண்டது.
இரட்டை அடுக்கு கூரை
இரட்டை அடுக்கு கூரை
இந்த எஸ்யூவியில் எலக்ட்ரிக்கல் முறையில் கட்டுப்படுத்தும் வசதிகொண்ட இரட்டை அடுக்கு கண்ணாடி கூரை பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காருக்குள் வெளிச்சத்தை வசதிகேற்ப ஏற்படுத்திக் கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
அடாப்டிவ் எல்இடி லைட் சிஸ்டம், கேபினுக்குள் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, 3எஸ் க்யூப் தொடர்பு வசதிகளுடன், ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த எஸ்யூவி கொண்டிருக்கும்.
அடுத்த தலைமுறை ஸ்கார்ப்பியோ
அடுத்த தலைமுறை ஸ்கார்ப்பியோ
எக்ஸ்100 அடிப்படையிலான புதிய எஸ்யூவி மாடல் மஹிந்திரா பிராண்டிலும் வெளியிடப்பட உள்ளது. இது எஸ்102 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் எஸ்யூவியாக இருக்கும் என்ற கணிக்கப்படுவதோடு, அடுத்த தலைமுறை ஸ்கார்ப்பியோவாக வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
இன்றைய ஃபேஸ்புக் வீடியோ: காணத்தவறாதீர்!
Post by DriveSpark Tamil.
Most Read Articles
English summary
Story first published: Thursday, April 24, 2014, 13:20 [IST]
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X