புதிய சாங்யாங் எஸ்யூவிக்கு டிவோலி என நாமகரணம்... இந்தியா வருமா?

By Saravana

சாங்யாங் நிறுவனம் எக்ஸ்100 என்ற பெயரிலான காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட்டை சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் பார்வைக்கு வைத்து வந்தது.

ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பி செக்மென்ட்டில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், எக்ஸ்100 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட இந்த புதிய மாடலுக்கு டிவோலி என்று சாங்யாங் பெயரிட்டிருக்கிறது.


சாங்யாங் டிவோலி

சாங்யாங் டிவோலி

இத்தாலியிலுள்ள ஒரு நகரத்தின் பெயர்தான் டிவோலி. இதுவரை கான்செப்ட் மாடலாக இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிலைக்கு ஏற்ற மாடடலின் மாதிரி படங்களை சாங்யாங் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. Urban SUV ரகமாக இதனை சாங்யாங் அழைக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவி என்று குறிப்பிட்டாலும், இது 4 மீட்டரைவிட சற்று அதிக நீளம் கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புத்தம் புதிய சாங்யாங் மாடலில் மஹிந்திரா- சாங்யாங் நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்திருக்கும் புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இங்கிலாந்தில் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.

விற்பனை

விற்பனை

அடுத்த ஆண்டு துவக்கத்தில், அதாவது இன்னும் ஒரு சில மாதங்களில் இங்கிலாந்து மார்க்கெட்டில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 12,000 பவுண்ட் விலையில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவுக்கு...?

இந்தியாவுக்கு...?

மஹிந்திரா கீழ் செயல்படும் சாங்யாங் மோட்டார்ஸ் உருவாக்கியிருக்கும் இந்த புத்தம் புதிய மாடலை இந்தியாவுக்கு பொருத்தமான அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆனால், இந்த புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என மஹிந்திரா தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த மாடல் வராவிட்டாலும், இதன் அடிப்படையிலான ஓர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

Most Read Articles
English summary
Yoo II Lee, CEO, Ssangyong Motor Company, has revealed the name of their project X100. The Urban SUV has been christened as ‘Tivoli'. The Korean manufacturer has been developing this vehicle for over three years now.
Story first published: Thursday, November 27, 2014, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X