ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற சுஸுகி செலிரியோ!

By Saravana

அடுத்த மாதம் ஐரோப்பிய மார்க்கெட்டில் சுஸுகி செலிரியோ விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அங்கு ஆல்ட்டோ (இந்தியாவில் ஏ- ஸ்டார் மாடலாக இருந்தது) காருக்கு மாற்றாக இந்த புதிய சுஸுகி செலிரியோ விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

இந்தநிலையில், ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் கார்களுக்கான தர கட்டுப்பாடுகள் மிக கடுமையானவை. அதற்காக, சுஸுகி செலிரியோ காரை ஐரோப்பிய என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது.

சுஸுகி செலிரியோ

அதில், சுஸுகி செலிரியோ கார் 5க்கு 3 என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய மார்க்கெட்டில் 5க்கு 5 நட்சத்திர அந்தஸ்தை பெறும் கார்கள் ஏராளம். மேலும், கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்திய மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல. அது தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவிற்கு செல்கிறது.

இதேபோன்று, தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட சுஸுகி செலிரியோ கார் லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்றது நினைவிருக்கலாம். கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்பட் மாடலில் முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Celerio Euro-spec model has gone through rigorous Euro NCAP test. Suzuki are proud to reveal that their hatchback has got a three star rating from Euro NCAP. These are decent figures for the hatchback, however, there are several vehicles that have scored a five star rating in Europe.
Story first published: Wednesday, November 12, 2014, 9:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X