இதுதான் மாருதி பிராண்டில் வர இருக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியா?!

By Saravana

ஆர்வத்தை தூண்டும் பல புதிய மாடல்களை மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் சியாஸ் செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் மாருதி நிறுவனம் அடுத்ததாக காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், மாருதியின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. ஐவி-4 கான்செப்ட் அடிப்படையிலான இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி விட்டாரா என்ற பிராண்டு பெயரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Suzuki Vittara

ஏற்கனவே, கிராண்ட் விட்டாரா என்ற பிரிமியம் எஸ்யூவி விற்பனை செய்த நிலையில், புதிய காம்பேக்ட் எஸ்யூவியை விட்டாரா என்ற பெயரில் ஐரோப்பிய மார்க்கெட்டில் களமிறக்கப்பட உள்ளது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஐரோப்பாவை தவிர்த்து பிற மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

Most Read Articles
English summary
The compact SUV by Suzuki is being dubbed as Vitara. The Japanese manufacturer confirms its new vehicle will be unveiled to all at 2014 Paris Motor Show. The date has been set for 2nd October, 2014 and will provide more details then. Maruti Suzuki should get the Vitara compact SUV to India as soon as it can. The priority is to launch it for European markets first. However, the vehicle is a global product and could make its way to India. They have not confirmed other markets for its compact SUV, other than Europe.
Story first published: Saturday, August 30, 2014, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X