ஜப்பானில் சுஸுகி ஸ்விஃப்ட் ஸ்டைல் அறிமுகம்... இந்தியர்களின் எதிர்பார்ப்பு!

By Saravana

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் கார் மாடல் ஸ்விஃப்ட். டிசைன், பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை ஸ்விஃப்ட் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இந்த நிலையில், ஸ்விஃப்ட் வாங்கும் பல வாடிக்கையாளர்கள் தங்களது காரின் அழகை கூட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றனர். ஆனால், அதற்கு உருப்படியான அல்லது எதிர்பார்க்கும் ஆக்சஸெரீஸ்கள் கிடைப்பதில்லை. இதனால், பல வாடிக்கையாளர்கள் ஆஃப்டர் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கி தங்களது ஸ்விஃப்ட் காரில் மாறுதல்களை செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், ஐரோப்பா மற்றும் பிற மார்க்கெட்டுகளில் அவ்வப்போது கவர்ச்சிகரமாக மாற்றப்பட்ட ஸ்விஃபப்ட் காரை சுஸுகி அறிமுகம் செய்து வருகிறது. தற்போது தனது சொந்த நாடான ஜப்பானில் சுஸுகி நிறுவனம் மாறுதல்களுடன் கூடிய ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. மிக கவர்ச்சியாக ஸ்விஃப்ட் ஸ்டைல் என்ற பெயரில் அந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை இந்தியாவிலும் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனை மாருதி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


ஸ்பெஷல் எடிசன் மாடல்

ஸ்பெஷல் எடிசன் மாடல்

மினி பிராண்டு கார்களின் சாயலில் வெளிப்புறத்தில் காட்சியளிக்கும் ஸ்விஃப்ட் ஸ்டைல் காரின் படங்களையும், கூடுதல் சிறப்பம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

முன்பக்க கிரில் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படுக்கை வாட்டில் குரோம் பூச்சுடன் கூடிய சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாடி கலரிலிருந்து கூரை வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

சில்வர் நிற தையலுடன் கூடிய கருப்பு நிற லெதர் இருக்கைகள், கியர் நாப், ஆர்ம் ரெஸ்ட், ஸ்டீயரிங் வீல்களுக்கு லெதர் உறை, பிரத்யேக அப்ஹோல்ஸ்டரி மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என உட்புறத்திலும் தனது கைவண்ணத்தால் அசத்தியிருக்கிறது சுஸுகி.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ கண்ணாடி, புற ஊதா தடுப்பு வசதி கொண்ட கதவு கண்ணாடிகள், க்ரூஸ் கன்ட்ரோல், பின்புறத்தில் சாய்த்துக் கொள்ளும் வசதி கொண்ட இருக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் போன்ற சிறப்பு ஆக்சஸெரீஸ்களை கொண்டிருக்கிறது.

 புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

ஸ்விஃப்ட் ஸ்டைல் காரில் கருப்பு வண்ணத்திலான புதிய 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகளும் அழகு சேர்க்கின்றன. பின்புறத்தில் ஸ்டைல் என்ற பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஜப்பானில் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஸ்விஃப்ட் ஸ்டைல் சிறப்பு பதிப்பு மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், பேடில் ஷிப்ட் வசதியுடன் கூடிய 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸும் பொருத்தப்பட்டிருக்கும்.

இது நம்ம ஊரு ஸ்விஃப்ட் ஸ்டைல்

இது நம்ம ஊரு ஸ்விஃப்ட் ஸ்டைல்

ஸ்விஃப்ட் ஸ்டைல் இல்லைன்னா ஒரு ஸ்விஃப்ட் கே கிளாஸ் அப்படின்னு போக வேண்டியதுதான். பெங்களூர் கல்யாணி மோட்டார்ஸ் வழங்கும் ஸ்விஃப்ட் கே கிளாஸ் காரை பற்றிய செய்திக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Suzuki in Japan has announced a special edition version of the Swift hatchback. Called the Suzuki Swift Style, this version of the popular hatchback comes with plenty of visual enhancements and equipment additions, while keeping the mechanics underneath unchanged.
Story first published: Wednesday, June 18, 2014, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X