சாலை விபத்துக்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

கடந்த ஆண்டு நாட்டின் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தேசிய குற்றப் பதிவு ஆவண மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 11வது ஆண்டாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 68,238 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த சாலை விபத்துக்களில் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ம் ஆண்டில் தமிழகத்தில் 67,757 சாலை விபத்துக்கள் நடந்ததிருந்த நிலையில், கடந்த ஆண்டு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது கவலை தருவதாக இருக்கிறது.

Bus Accident

இதேபோன்று, சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களிலும் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. பயிற்சி இல்லாத ஓட்டுனர்கள், அதிவேகம், சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளும் அதிக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சாலை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கவலை தரும் விஷயமாகியுள்ளது.

Most Read Articles
English summary
Tamil Nadu has topped the National Crime Record Bureau's datas for road accidents in the country. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X