3 வித டிரைவிங் ஆப்ஷன்களில் ஏஎம்டி கியர் பாக்ஸ்... அசத்தப் போகும் டாடா ஸெஸ்ட், போல்ட்!

By Saravana

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா ஸெஸ்ட், போல்ட் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் மாடல்களாக இருக்கின்றன. மேலும், இந்த இரு மாடல்களிலும் ஆட்டோமேட்டட் கியர் பாக்ஸ் மாடல்களில் வருவதும் அதிக எதிர்பார்ப்புக்கு காரணமாகியிருக்கிறது.

மேலும், டீசல் மாடலில் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்டதாகவும் வர இருக்கின்றன. இந்த இரு கார்களை பற்றியும் புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில், தற்போது வெளியாகியுள்ளத் தகவல் நம் எதிர்பார்ப்பையும், ஆவலையும் பன்மடங்கு கூட்டுவதாக அமைந்துள்ளது. ஆம், ஸ்போர்ட்ஸ் கார்களில் கொடுக்கப்படுவது போன்று மூன்று வித டிரைவிங் ஆப்ஷன்களில் ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் வர இருக்கிறதாம்.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிரைவிங் ஆப்ஷன்கள்

டிரைவிங் ஆப்ஷன்கள்

City, Eco மற்றும் Sports ஆகிய மூன்றுவிதமான டிரைவிங் ஆப்ஷன்களில் மாற்றிக் கொள்ளும் வசதியை ஏஎம்டி மாடல் பெற்றிருக்குமாம். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் போக்குவரத்து நிலைக்கு தக்கவாறு தங்கள் விரும்பம்போல் டிரைவிங் ஆப்ஷன்களை மாற்றிக் கொள்ள முடியும்.

 ஏஎம்டி மாடலில் மட்டும்

ஏஎம்டி மாடலில் மட்டும்

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலில் இந்த டிரைவிங் ஆப்ஷன்கள் இருக்கும். ஸ்போர்ட்ஸ் நிலைக்கு மாற்றினால் கியர் ஷிப்ட் அதிவேகத்தில் நடந்து காரின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அதிகமாக கிடைக்கும். ஈக்கோ என்ற டிரைவிங் நிலைக்கு மாற்றும்போது குறைந்த ஆர்பிஎம்.,மில் அடுத்தடுத்த கியர்கள் மாற்றப்படும். அதாவது, காரின் பெர்ஃபார்மென்ஸ் குறைவாக இருக்கும். இது அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இதுதவிர, நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தகுந்தவாறான சிட்டி டிரைவிங் ஆப்ஷனும் உண்டு.

எஞ்சின் மாடல்கள்

எஞ்சின் மாடல்கள்

ஸெஸ்ட், போல்ட் கார்களின் பெட்ரோல் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 85 பிஎச்பி வரை சக்தியையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும். இதேபோன்று, டீசல் மாடலில் 75 பிஎச்பி மாடலும், 90 பிஎச்பி கொண்ட இரு வித ட்யூனிங் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இவை முறையே 190 என்எம், 200 என்எம் டார்க்கை அதிகபட்சம் வழங்கும்.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். டாடா ஸெஸ்ட் காரின் டீசல் மாடலில் மட்டும் தற்போது ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் அந்த நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளை, போல்ட் காரின் டீசல் மாடலிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மாடல்

முதல் மாடல்

டீசல் மாடலில் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்டதாக வரும் முதல் கார் என்ற பெருமையை டாடா ஸெஸ்ட் பெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து, போல்ட் காரின் டீசல் மாடலிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படி, இரு மாடல்களின் டீசல் மாடல்களும் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்டதாக வரும்போது விற்பனையில் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில்...

விரைவில்...

இன்னும் சில வாரங்களில் டாடா ஸெஸ்ட் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஓரிரு மாதத்திற்குள் போல்ட் ஹேட்ச்பேக் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிடும். மொத்தத்தில் இந்த ஆண்டு பண்டிகை காலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய திருப்பத்தை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles
English summary
The petrol variant of the Tata Bolt which is powered by the 1.2 litre Revotron turbocharged engine will offer three driving modes.
Story first published: Tuesday, July 1, 2014, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X