அடுத்த ஆண்டு புதிய இண்டிகாவை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

By Saravana

அடுத்த ஆண்டு டாடா இண்டிகாவுக்கு மாற்றாக புதிய கார் மாடலை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் வலம் வரும் இண்டிகா தற்போது டாக்சி ஆபரேட்டர்களின் சாய்ஸாகவே இருக்கிறது. தனிநபர் மார்க்கெட்டில் டாடா இண்டிகாவுக்கு இடம் இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், டாடா இண்டிகா இவி2 காருக்கு விடை கொடுக்க டாடா முடிவு செய்துள்ளது.

Tata Indica ev2

X0 பிளாட்ஃபார்மில் புதிய இண்டிகா காரை வடிவமைத்து வருகிறது டாடா மோட்டார்ஸ். எப்படி விஸ்டா காரை போல்ட் காராக டாடா மாற்றியதோ, அதேபோன்றுதான் தற்போதைய இண்டிகா காரில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து புதிய கார் மாடலாக அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கார் நானோ கார் உற்பத்தி செய்யப்பட்டு வரும் சனந்த் ஆலையில் தயாரிக்கப்படும்.மாதத்திற்கு 20,000 நானோ கார்களை தயாரிக்கும் திறன் கொண்ட சனந்த் ஆலையில் தற்போது 1,000 முதல் 2,000 நானோ கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனால், டாடாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், புதிய இண்டிகா காரை சனந்த் ஆலையில் உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இண்டிகாவுக்கு மாற்றாக வரும் புதிய காரின் உற்பத்தி சனந்த் ஆலையில் துவங்கப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Tata Motors has planned a replacement model for the decade old Indica eV2 model. The new car will continue to be based on the X0 platform, but it will be significantly updated. Much like the Bolt is a highly evolved form of the Vista.
Story first published: Wednesday, April 23, 2014, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X