விரைவில் 1,000 கிமீ ரேஞ்ச் கொண்ட மான்ஸா ஹைபிரிட் மாடலை களமிறக்கும் டாடா!

By Saravana

கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட மான்ஸா காரின் ஹைபிரிட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் அதேவேளையில், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை அளிக்க வல்லதாக இருந்த கார் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தநிலையில், ஹைபிரிட் கார்களுக்கான வரவேற்பும், அதை பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதால், தற்போது மான்ஸா காரின் ஹைபிரிட் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா முடிவு செய்துள்ளது.


 ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

மான்ஸா ஹைபிரிட் மாடலில் 1.5 லிட்டர் டைரக்ட் காமன் ரயில் டர்போ டீசல் எஞ்சினும், 45kW எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். இது டீசல் ஹைபிரிட் காராக வருவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுவதுமாக டீசலை நிரப்பிவிட்டு, பேட்டரியையும் முழு சார்ஜ் செய்துவிட்டால் ஒட்டுமொத்தமாக 1,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிவிடி டிரான்ஸ்மிஷன்

சிவிடி டிரான்ஸ்மிஷன்

டீசல் ஹைபிரிட் காராக மட்டுமில்லாமல், சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் டாடா மான்ஸாவின் ஹைபிரிட் மாடல் வர இருக்கிறது. இதுவும் அதிக எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும். மேலும், இந்திய கார் தயாரிப்பாளரிடமிருந்து வரும் முதல் டீசல் ஹைபிரிட் செடான் காராகவும் இருக்கும்.

 டிசைன்

டிசைன்

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா மான்ஸா காருக்கும், மான்ஸா ஹைபிரிட் கார் மாடலுக்கும் டிசைனில் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

விலை

விலை

இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய டாடா மான்ஸா காரின் ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.86 லட்சம் முதல் ரூ.8.08 லட்சம் வரையிலான விலையில் டாடா மான்ஸா விற்பனை செய்யப்படுகிறது. ஹைபிரிட் மாடல் இதைவிட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Motors will be the only Indian manufacturer to offer hybrid vehicles in the domestic market. The Manza hybrid sedan will sport a 1.5-litre Direct Common Rail turbocharged diesel powered engine. It will also have a 45 kW Electric Traction Motor thus, making it a hybrid vehicle.
Story first published: Wednesday, May 28, 2014, 16:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X