ஜாம்ஷெட்பூர் டாடா ஆலையில் டிரக் உற்பத்தி துவங்கியதன் 60ம் ஆண்டு கொண்டாட்டம்

பாரம்பரியமிக்க ஜாம்ஷெட்பூர் ஆலையில் டிரக் உற்பத்தி துவங்கி 60 ஆண்டுகள் ஆவதை டாடா மோட்டார்ஸ் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளது.

கடந்த 1945ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஆலையில் 1954ம் ஆண்டு முதல் டிரக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காலமாற்றத்துக்கு தக்கவாறு இந்த ஆலையை அவ்வப்போது மேம்படுத்தியதுடன், தற்போது நவீன வசதிகள் கொண்ட டிரக் தயாரிப்பு ஆலையாக விளங்குகிறது.

Tata Truck

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு டிரக்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், கடந்த ஆண்டு 2 மில்லியன் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை கடந்தது.

நுலான் கார் கேர் செட் மீது தள்ளுபடி!

இந்த நிலையில், இங்கு டிரக் உற்பத்தி துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை டாடா மோட்டார்ஸ் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளது. இந்திய வர்த்தக வாகன மார்க்கெட்டில் பல முன்மாதிரியான வாகனங்களை உற்பத்தி செய்து தந்த பெருமை இந்த ஆலைக்கு உண்டு என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரி ரவீந்திரா பிஷரோடி தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Tata Motors, one of India's largest car as well as commercial vehicle manufacturer, is celebrating 60 years of manufacturing trucks in Jamshedpur.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X