டாடா கார்கள் மீது ரூ.90,000 வரை தள்ளுபடி சலுகைகள்

By Saravana

விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில் தனது 5 கார் மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் அதிரடி தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. May Offer என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புச் சலுகை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ், பணத் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற தள்ளுபடிகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டாடா சஃபாரி டைகோர், டாடா இண்டிகோ இசிஎஸ், டாடா விஸ்டா டெக், டாடா நானோ மற்றும் டாடா சுமோ கார்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், டாடா சஃபாரி எஸ்யூவியின் எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கும், பிற மாடல்களில் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மேலும், புதிய டாடா காரை வாங்குவோர் Power Play offer என்ற திட்டத்திற்கும் தகுதியுடையவர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்கள் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியினரை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தமிழக வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு திட்டம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 டாடா சஃபாரி டைகோர்

டாடா சஃபாரி டைகோர்

ரூ.90,000 வரை மதிப்புடைய சலுகைகளை பெற முடியும். இதில், 3 ஆண்டுகளுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் இதர சலுகைகளும் அடங்கும்.

 டாடா விஸ்டா டெக்

டாடா விஸ்டா டெக்

விரைவில் போல்ட் கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், டாடா விஸ்டா டெக் கார் மாடலுக்கு ரூ.80,000 வரை சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டாடா நானோ

டாடா நானோ

டாடா நானோ காருக்கு ரூ.55,000 மதிப்புடைய சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ்

டாடா இண்டிகோ இசிஎஸ் செடான் காருக்கு ரூ.58,000 மதிப்புடைய தள்ளுபடி சலுகைகளை பெற முடியும்.

 டாடா சுமோ

டாடா சுமோ

டாடா சுமோ எஸ்யூவிக்கு ரூ.72,000 வரை அதிகபட்சமான சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத இறுதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Story first published: Saturday, May 24, 2014, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X