புதிய 3.0 லிட்டர் டீசல் எஞ்சினை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்!

By Saravana

4 சிலிண்டர்கள் கொண்ட புதிய 3.0 லிட்டர் காமன் ரெயில் டீசல் எஞ்சினை உள்நாட்டு நுட்பத்தில் டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருகிறது.

புதிய வகை ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சினை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. டாடா போல்ட், ஸெஸ்ட் கார்களில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

Tata Xenon Pick Up Truck

இந்த நிலையில், அடுத்ததாக புதிய 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை தயாரித்து வருகிறது புனேயில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய டீசல் எஞ்சினை உருவாக்கி வருகிறது.

இலகு எடை, குறைவான கார்பனை வெளியேற்றும் அம்சங்கள் கொண்டதாக இந்த புதிய டீசல் எஞ்சின் இருக்கும். டாடா ஸினான் பிக்கப் டிரக் மற்றும் லேண்ட்ரோவர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வரும் டாடாவின் புதிய சொகுசு எஸ்யூவியில் இந்த புதிய எஞ்சின் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த புதிய டீசல் எஞ்சின் தற்போது புரோட்டோடைப் நிலையிலேயே இருக்கிறது. அடுத்தக்கட்ட சோதனைகளை கடந்து தயாரிப்பு நிலைக்கு செல்வதற்கு சிறிது காலம் பிடிக்கலாம் என்று டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Besides its new Revotron range of engines, which will include new units in the future, the company is also developing larger engine to power its SUVs and pick-up trucks. The company is now said to have developed a new 4-cylinder inline, 3.0-litre, common-rail fuel injected diesel engine at its Pune-based Engineering Research Centre (ERC).
Story first published: Saturday, May 17, 2014, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X