நானோ காருக்கு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்: டாடா முடிவு!!

By Saravana

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட நானோ கார் மாடலை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறத்துக்கு ஏற்ற ஹேட்ச்பேக் கார்களில் நானோவும் ஒன்று. குறைந்த விலை, அதிக மைலேஜ் போன்றவை நானோ காருக்கு ப்ளஸ் பாயிண்ட்டுகளாக உள்ளன.

நானோ காரின் விற்பனையை உயர்த்தவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் காராக மாற்றவும் முயற்சிகளை டாடா மேற்கொண்டு வருகிறது.

ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ கார் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட நானோ காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இதழ் செய்தி கூறுகிறது.

 அதிகாரி உறுதி

அதிகாரி உறுதி

இந்த தகவலை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாண்மை துறை மூத்த அதிகாரி கிரிஷ் வாக் உறுதிப்படுத்தியுள்ளார்.

 எந்த வகை டிரான்ஸ்மிஷன்?

எந்த வகை டிரான்ஸ்மிஷன்?

நானோ காரில் சிவிடி அல்லது மாருதி செலிரியோவில் வருவது போன்ற கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷனை பொருத்துவது குறித்த டாடா பரிசீலித்து வருகிறது.

 காம்பினேஷன் சூப்பர்

காம்பினேஷன் சூப்பர்

பவர் ஸ்டீயரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட நானோ கார் நிச்சயம் சிறந்த சிட்டி காராக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X