டாடா ஸெஸ்ட் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

By Saravana

வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்து இனிய துவக்கத்தை கொடுக்கும் வகையில், டாடா ஸெஸ்ட் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை காம்பேக்ட் செடான் காராக வருவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனை இந்த கார் சிறப்பாக பூர்த்தி செய்யும் என கருதப்படுகிறது. அதற்கான சில காரணங்களையும், முன்பதிவு விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 முன்பதிவு தொகை

முன்பதிவு தொகை

ஆன்லைனில் ரூ.21,000 முன்பணம் செலுத்தி ஸெஸ்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் முன்பதிவுக்கான இணையதள பக்கத்தில் உங்களுக்கு அருகாமையிலுள்ள டீலரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அப்படி தேர்வு செய்தவுடன் அந்த முன்பணம் அந்த டீலர்ஷிப்புக்கு மாற்றப்பட்டுவிடும்.

ஆனால்...

ஆனால்...

பெட்ரோல் மாடலா அல்லது டீசல் மாடலா என்பதை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அந்த இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வேரியண்ட் விபரங்கள் இல்லை. விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்படும் தினத்திலேயே அந்த விபரங்களும், விலை விபரங்களும் தெரியவரும்.

 புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

டாடா தயாரித்திருக்கும் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும் முதல் டாடா கார் ஸெஸ்ட். மேலும், இந்த பெட்ரோல் எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும். மேலும், ஸ்போர்ட், ஈக்கோ, சிட்டி ஆகிய மூன்றுவிதமான டிரைவிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்பது சிறப்பாக கூறலாம். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

 ஏஎம்டி கியர் பாக்ஸ்

ஏஎம்டி கியர் பாக்ஸ்

டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு வரும் இந்தியாவின் முதல் கார் டாடா ஸெஸ்ட். டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது புதிய ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

ஹார்மன் சிஸ்டம்

ஹார்மன் சிஸ்டம்

அமெரிக்காவின் ஹார்மன் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். இது டச் ஸ்கிரீன் வசதி கொண்டதாக வருகிறது. மேலும், கிளைமேட் கன்ட்ரோல் வசதியும் இருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டார் வேரியண்ட்டில் ட்வின் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் இருக்கும்.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வரும் இந்த புதிய கார் டாடா மோட்டார்சின் தலையெழுத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Most Read Articles
English summary
Tata Motors has commenced the online booking process for its most anticipated Zest compact sedan car. 
Story first published: Monday, July 21, 2014, 8:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X