விரைவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் டாடா நானோ!

By Saravana

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) கொண்ட டாடா நானோ கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாருதி செலிரியோவில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடல் மெஹா ஹிட்டடித்துள்ளதை தொடர்ந்து, நானோ காரிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.


ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்

ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்

இத்தாலியை சேர்ந்த மெக்னடி மரெல்லி நிறுவனத்தின் துணையுடன் இந்த புதிய வகை ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

ஏஎம்டி மாடல் கொண்ட நானோ கார் பின்புறத்தில் திறக்கக்கூடிய கதவு கொண்டதாகவும் இருக்கும். பம்பர், ஹெட்லைட் டிசைனிலும் மாற்றங்கள் இருக்கும்.

தீபாவளி ரீலிஸ்

தீபாவளி ரீலிஸ்

தீபாவளியையொட்டி பண்டிகை காலத்தில் இந்த புதிய ஏஎம்டி மாடல் கொண்ட நானோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறைவான விலை மாடல்

குறைவான விலை மாடல்

ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டால் மார்க்கெட்டிலேயே மிக மலிவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் மாடலாக நானோ கார் இருக்கும். எனவே, விற்பனையிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நானோ காரை தவிர்த்து டாடா போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்களிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் மாடலில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Motors revealed its plan to launch an AMT version in its most affordable car till date the Nano. The Automated Manual Transmission will be offered in the Twist variant of Nano. The Indian manufacturer has been testing the vehicle rigorously prior to its launch.
Story first published: Saturday, June 7, 2014, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X