கிராஷ் டெஸ்ட்டில் 'பூஜ்யம்' வாங்கிய இந்தியாவின் பிரபல கார்கள்

ஜெர்மனியில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் டாடா நானோ கார் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கூட பெறாமல் பூஜ்யம் வாங்கியது. இதேபோன்று, மாருதி ஆல்ட்டோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஹூண்டாய் ஐ10 ஆகிய கார்களும் பூஜ்யம் வாங்கின.

அதேவேளை, ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. உலகின் குறைந்த விலை கார் டைட்டிலை தக்க வைத்து வரும் டாடா நானோ காரும் மிக மோசமாக பல்ப் வாங்கியது

நானோ கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பூஜ்யம்

பூஜ்யம்

டம்மி எனப்படும் மனித பொம்மைகளை நானோ காருக்குள் வைத்து சோதனை செய்யப்பட்டது. 65 கிமீ வேகத்தில் காரை சுவற்றில் மோதி சோதனை செய்யப்பட்டது. இதில், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் நானோ கார் மிக மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பேக் இல்லை

ஏர்பேக் இல்லை

பொதுவாக இதுபோன்ற கிராஷ் டெஸ்ட் செய்யும்போது மனித பொம்மைகளின் முகத்தில் மேக்கப் செய்து அமர வைத்திருப்பர். ஏர்பேக் உள்ள கார்களில் டம்மியின் முகத்தில் அதிக பாதிப்புகள் இருக்காது. ஆனால், டாடா நானோ காரில் இருந்த பொம்மைகளின் முகம் கடுமையாக சேதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அய்யய்யோ

அய்யய்யோ

முகம் மட்டுமின்றி, மனித பொம்மையின் கால்கள் மற்றும் கைகளும் பலத்த சேதமைடந்திருந்ததாகவும், ஒருவேளை, இதுபோன்ற விபத்தில் சிக்கும்போது முன்வரிசை பயணிகள் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிஏபி அதிகாரி சாடல்

என்சிஏபி அதிகாரி சாடல்

தரமற்ற கட்டுமானம், ஏர்பேக் இல்லாதது உள்ளிட்டவை இந்தியாவில் நானோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும், உலகின் பிற நாடுகளில் கடைபிடிக்கப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை தங்களது கார்களில் இருக்குமாறு அந்த நிறுவனத்தார் தெரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும் சோதனை மையத்தின் தலைவர் மேக்ஸ் மோஸ்லி தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இதுபோன்ற கிராஷ் டெஸ்ட் சோதனைகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும். மேலும், பாதுகாப்பான கார்களை தயாரிப்பதற்கும் கார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என இந்த சோதனையில் பங்கெடுத்த மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.

டாடா நம்பிக்கை

டாடா நம்பிக்கை

கிராஷ் டெஸ்ட்டிற்கு முன்பாக நானோ காருக்கு 4 நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக டாடா நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கிராஷ் டெஸ்ட்

இந்தியாவில் கிராஷ் டெஸ்ட்

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் கிராஷ் டெஸ்ட்டுகளுக்கு இணையான சோதனைகளை நடத்துவதற்கு இந்தியாவிலும் என்சிஏபி சோதனைகளை கட்டாயமாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் இந்தியாவிலும், இந்த என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனை கட்டாயமாக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X