பூட் ரூமை திறப்பதற்கு கதவுடன் வந்த புதிய நானோ கார்!

By Saravana

நானோ காரில் இருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். பவர் ஸ்டீயரிங்குடன் சமீபத்தில் நானோ கார் ட்விஸ்ட் என்ற மாடலில் விற்பனைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது டெயில் கேட்டை திறந்து மூடும் வசதி கொண்ட புதிய நானோ காரின் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். நானோ ஆக்டிவ் என்ற பெயரிலான இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பின்புறத்தில் கதவு

பின்புறத்தில் கதவு

பொருட்களை பூட் ரூமில் எளிதாக வைத்து எடுக்கும் வசதி கொண்டதாக டெயில் கேட்டுடன் தற்போது நானோ கார் வந்துள்ளது. தவிர, பின்புற இருக்கையையும் மடக்கிக் கொண்டு அதிக பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். பிற ஹேட்ச்பேக் கார்களை போன்றே டெயில் கேட் மேல்நோக்கி திறக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மைலேஜ் குறையும்

மைலேஜ் குறையும்

பூட் ரூமுக்கு கதவு கொடுக்கப்பட்டிருப்பதால், நானோ காரின் எடை 70 கிலோ கூடியுள்ளது. இதனால், மைலேஜ் குறையும். இதனை கருதி, பெட்ரோல் டேங்க் கொள்ளளவை 25 லிட்டராக உயர்த்தியுள்ளது டாடா.

புதிய முகப்பு டிசைன்

புதிய முகப்பு டிசைன்

பூட் ரூமுக்கு கதவு கொடுக்கப்பட்டதோடு, ஆக்டிவ் மாடலின் முகப்பு டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பம்பர் டிசைன் மற்றும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஏர்டேம், பனி விளக்குகளின் இருப்பிடம் என அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உற்பத்தி

உற்பத்தி

தற்போது கான்செப்ட் நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் நானோ ஆக்டிவ் மாடல் விரைவில் உற்பத்தி நிலையை எட்ட உள்ளது.

Most Read Articles
English summary
While the Nano Twist took care of the hard to turn steering wheels with an electronic power steering unit, the Twist Active has the solution to the hard to reach boot space in the small city car. The Twist Active has a rear end like a conventional hatchback, with a boot door that can be lifted to easily access.
Story first published: Friday, February 7, 2014, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X