டாடா ஸெஸ்ட் பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர் பாக்ஸ் செய்யப்படுமா?!

சென்னையில் டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.4.63 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.5.68 லட்சம் சென்னை எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவுத் தலைவர் ரஞ்சித் யாதவ் மற்றும் திட்டமிடல் மற்றும் திட்ட மேலாண்மை துறை துணைத் தலைவர் கிரிஷ் வா ஆகியோர் இந்த புதிய ஸெஸ்ட் காரை சென்னையில் அறிமுகம் செய்தனர்.

Tata Zest

நிகழ்ச்சியில் பேசிய கிரிஷ் வா கூறுகையில்," டாடாவின் புதிய டிசைன் தாத்பரியத்தில் ஸெஸ்ட் கார் டிசைன் செய்யப்ப்டடுள்ளது. இந்த செக்மென்ட் மாடல்களிலேயே பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற பல முதன்மையான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.

மேலும், டீசல் கார் மார்க்கெட்டில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் மாடல். இதேபோன்று, இந்த செக்மென்ட்டில் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மாடலாகவும் அறிமுகம் செய்துள்ளோம். இந்த கார் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும்," என்று கூறினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் ரஞ்சித் யாதவ்," தமிழகத்தில் ஆட்டோமொபைல் மார்க்கெட் வளர்ச்சியில் சரிவு காணப்பட்டாலும், காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட் 2.5 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

சென்னையில் ஸெஸ்ட் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சென்னையில் விற்பனைக்கு முன்னர் கிடைத்த 50 சதவீத முன்பதிவு ஸெஸ்ட் காரின் பெட்ரோல் மாடலுக்கே கிடைத்துள்ளது.

மேலும் டீலர்ஷிப்புகளையும் கூடுதல் வசதிகள் மற்றும் புதிய டிசைனுடன் மேம்படுத்தி வருகிறோம். டீசல் மாடலின் ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலை அறிமுகம் செய்வது குறித்த முடிவு செய்யப்படும்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Answering to a question about the introduction of Zest Petrol AMT, Mr. Yadav answered, “Zest Petrol version with AMT may come in the near future if there is enough potential.”
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X