அக்டோபரில் இந்தியாவில் ரிலீசாகும் புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா!

By Saravana

அக்டோபர் மாதம் இந்தியாவில் புதிய டெர்ரா எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஜப்பானை சேர்ந்த டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு விட்டுள்ளது. அடுத்ததாக சுற்றுச்சூழலுக்கு கெடுதல் தராத புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.


டி4 ஆட்டோரிக்ஷா

டி4 ஆட்டோரிக்ஷா

டி4 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய ஆட்டோரிக்ஷாவில் டிரைவரை தவிர்த்து 3 பேர் செல்லலாம். ஆனால், 5 பேர் வரை பயணிக்க இருக்கை வசதியை அதிகரிக்க முடியும்.

மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் 3.5kw மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும். சாதாரண பிளக் பாயிண்டிலேயே இதனை சார்ஜ் செய்ய முடியும்.

பேட்டரி

பேட்டரி

லீட் ஆசிட் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி மாடல்களில் கிடைக்கும். இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியில் 80 சார்ஜ் செய்வதற்கு 2 மணிநேரம் பிடிக்கும். முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 7 மணி நேரம் ஆகும்.

முதலீடு

முதலீடு

பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜியில் இயங்கும் ஆட்டோரிக்ஷாக்களைவிட இது விலை அதிகம். இருப்பினும், இதன் குறைவான இயக்குதல் செலவீனத்தின் மூலம் முதல் 14 மாதங்களில் கூடுதல் முதலீட்டை சமன் செய்துவிட முடியும் என டெர்ரா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

உற்பத்தி

உற்பத்தி

ராஜ்கோட்டை சேர்ந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை உற்பத்தி செய்ய டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ,30 கோடியை முதலீடு செய்வதற்கும் முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Japanese electric vehicle manufacturer, Terra Motors is planning to introduce an electric autorickshaw in the Indian market around October this year. 
Story first published: Thursday, August 21, 2014, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X