இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகம் செய்த டெர்ரா மோட்டார்ஸ்!

By Saravana

இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகம் செய்துள்ளது ஜப்பானை சேர்ந்த டெர்ரா மோட்டார்ஸ். டெர்ரா ஆர்6 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா தற்போது அரசின் அனுமதிக்கான பரிசோதனைகளில் இருந்து வருகிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஆட்டோரிக்ஷா அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி ஆட்டோரிக்ஷாக்களைவிட பன்மடங்கு குறைவான எரிபொருள் செலவீனம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையிலான இந்த ஆட்டோரிக்ஷாவை பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


 வடிவம்

வடிவம்

2,950மிமீ நீளம், 1,090மிமீ அகலம் மற்றும் 1,800மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது.

 இலகு எடை

இலகு எடை

எடை 278 கிலோ எடை கொண்ட இந்த ஆட்டோரிக்ஷாவில் 150 கிலோ எடை கொண்ட 48V 100AH பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஓட்டுனர் மற்றும் 6 பயணிகள் சேர்த்து மொத்தமாக 7 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

வேகம்

வேகம்

7 பேர் செல்லும்போது மணிக்கு அதிகபட்சமாக 30 கிமீ வேகம் வரை செல்லும்.

 எரிபொருள் செலவீன ஒப்பீடு

எரிபொருள் செலவீன ஒப்பீடு

பெட்ரோல் ஆட்டோரிக்ஷா மற்றும் டெர்ரா ஆர்-6 எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவிற்கான எரிபொருள் செலவீனத்தை ஒப்பீடு செய்து காட்டும் விளக்கப்படம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ரிவர்ஸ் கியர் வசதி உள்ளது. மழை நேரங்களில் முழுமையாக கவர் செய்ய முடியும்.10 டிகிரி சரிவுப் பாதைகளிலும் இந்த ஆட்டோரிக்ஷா சிறப்பான இழுவை திறனுடன் பயணிக்கும்.

இலக்கு

இலக்கு

அடுத்த ஆண்டு 10,000 ஆர்-6 எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களை விற்பனை செய்ய டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்டோரிக்ஷா ஷேர் ஆட்டோ பயன்பாட்டுக்கு சிறப்பானதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Japanese electric vehicle maker Terra Motors has unveiled new R6 electric auto rickshaw in India.
Story first published: Saturday, December 20, 2014, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X