ஆல் வீல் டிரைவ், ஆட்டோபைலட் சிஸ்டத்துடன் தெஸ்லா எஸ் எலக்ட்ரிக் கார்!

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா நிறுவனத்தின் தெஸ்லா எஸ் சொகுசு எலக்ட்ரிக் கார் அங்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தநிலையில், புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தெஸ்லா எஸ் சொகுசு எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் தெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ., எலன் மஸ்க் புதிய மாடல் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

புதிய தெஸ்லா எஸ் கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது. சேஸீயின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் இரு மோட்டார்கள் கொண்டதாக ஆல் வீல் டிரைவ் மாடல் வருகிறது. முன்னதாக ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருந்த தெஸ்லா எஸ் காரில் தற்போது முன்புற சக்கரங்களுக்கும் பவரை அளிக்கும் விதத்தில் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்

சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்

இது ஓர் எலக்ட்ரிக் கார் என்று நம்பமுடியாத அளவிற்கு சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த ஆல் வீல் டிரைவ் தெஸ்லா எஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். இந்த ஆல் வீல் டிரைவ் மாடலை ஆப்ஷனலாக வாடிக்கையாளர் தேர்வு செய்து கொள்ளலாம். மோசமான சாலை நிலைகளில் இந்த ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பயனுள்ளதாக அமையும்.

ஆட்டோபைலட் சிஸ்டம்

ஆட்டோபைலட் சிஸ்டம்

மற்றொரு முக்கிய வசதியாக, ஆட்டோபைலட் சிஸ்டமும் தெஸ்லா எஸ் காருக்கு ஆப்ஷனலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் உள்ள எச்சரிக்கை பலகைகள் மற்றும் சிக்னல்களை இந்த ஆட்டோபைலட் சிஸ்டம் கண்டுகொண்டு அதற்கு ஏற்ப செயல்படும். பாதசாரிகள் மற்றும் வழியில் உள்ள பொருட்களை கண்டுகொண்டு தேவைப்பட்டால், தானியங்கி முறையில் செயல்பட்டு, பிரேக் பிடித்து காரை நிறுத்திவிடும். இதற்காக, 360 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கும் கேமரா, சென்சார்கள் மற்றும் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

தானியங்கி பார்க்கிங்

தானியங்கி பார்க்கிங்

புதிய தெஸ்லா எஸ் மாடல் கார் தானியங்கி முறையில் பார்க்கிங் செய்துகொள்ளும் வசதியுடன் வருகிறது. இந்த புதிய வசதிகள் மூலம் தெஸ்லா எஸ் கார் அடுத்த தலைமுறை வசதிகள் கொண்ட எலக்ட்ரிக் காராக மாறியிருக்கிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

உற்பத்தி துவங்கப்பட்டு விட்ட இந்த புதிய தெஸ்லா எஸ் கார் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் தெஸ்லா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடலிலும் இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

Most Read Articles
 
English summary
US based electric car maker Tesla has announced a pair of new features vital to the luxury market.
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X