இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டாப்- 10 கார் மாடல்கள்!

By Saravana

இந்திய கார் மார்க்கெட் மந்த கதியிலிருந்து விடுபட்டு முன்னேற்றப் பாதைக்கு திரும்பியிருக்கிறது. இதனால், கார் தயாரிப்பாளர்கள் கூடுதல் உற்சாகத்துடன் தங்களது விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அதற்கு வலு சேர்க்கும் விதமாக பல புதிய மாடல்களையும் களமிறக்கி வருகின்றனர். இதனால், விற்பனையில் டாப்- 10 கார் மாடல்களின் பட்டியலில் பெரும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாவில் இந்திய கார் மார்க்கெட் புது வரவுகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. எத்துனை மாடல்கள் வந்தாலும் மாருதி கார் நிறுவனம் டாப்- 10 பட்டியலில் முதன்மை பெற்றுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடுகளில் காணலாம்.

அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள்

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையில் டாப்-10 கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்)வெளியிட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

பத்தாவது இடத்தில் ஹோண்டா அமேஸ் கார் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 15,182 அமேஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 15,853 கார்கள் விற்பனையாகியிருந்தன. மேலும், கடந்த ஆண்டு 7வது இடத்திலிருந்து தற்போது 10வது இடத்துக்கு வந்துள்ளது.

9. மாருதி செலிரியோ

9. மாருதி செலிரியோ

ஒப்புக்கு இருந்த ஏ- ஸ்டார், எஸ்டீலோ கார் மாடல்களுக்கு மாற்றாக வந்த செலிரியோ மாருதிக்கு புதுத்தெம்பை அளித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 16,541 செலிரியோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

8. ஹூண்டாய் இயான்

8. ஹூண்டாய் இயான்

டாப்- 10 பட்டியலில் ஹூண்டாய் இயான் கார் எட்டாவது இடத்தில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 19,379 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 24,526 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளன.

7. ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

7. ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாயின் லேட்டஸ்ட் மாடலான எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் கார் டாப்- 10 விற்பனை பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 21,524 கார்கள் விற்பனையாகியுள்ளன.

6. ஹோண்டா சிட்டி

6. ஹோண்டா சிட்டி

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் விற்பனையில் கலக்கி வரும் புதிய ஹோண்டா சிட்டி ஆறாவது இடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 21,985 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 6,949 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியிருந்தன. கடந்த ஆண்டு பெட்ரோல் மாடலில் மட்டும் ஹோண்டா சிட்டி விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 26,830 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியுள்ளன. சிறப்பான தோற்றம், வசதிகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்த இந்த புதிய மாடல் டாப்-10 பட்டியலில் ஐந்தாவது இடத்தி்ல் உள்ளது.

4. மாருதி சுஸுகி வேகன் ஆர்

4. மாருதி சுஸுகி வேகன் ஆர்

தொடர்ந்து 4வது இடத்தில் மிக ஸ்திரமான விற்பனையுடன் அமர்ந்திருக்கிறது மாருதி வேகன் ஆர். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 38,156 வேகன் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 35,141 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருந்தன. மேலும், புதிய செரிலியோவின் தாக்கத்தை தாண்டி விற்பனையில் சாதித்து வருகிறது.

3. மாருதி ஸ்விஃப்ட்

3. மாருதி ஸ்விஃப்ட்

இந்திய மக்களின் மனங்கவர்ந்த மாடலான ஸ்விஃப்ட் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் 48,120 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 47,442 கார்கள் விற்பனையாகியுள்ளன. விற்பனையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டாலும் வாடிக்கையாளர்களிடம் தனி மதிப்புடன் வலம் வருகிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காருக்கு இருக்கும் மவுசும் அதற்கு சான்றாக இருக்கிறது.

2. மாருதி டிசையர்

2. மாருதி டிசையர்

இரண்டாம் இடத்தில் ஸ்விஃப்ட் டிசையர் கார் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 50,951 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 49,259 கார்கள் விற்பனையாகியுள்ளன.

1.மாருதி சுஸுகி ஆல்ட்டோ

1.மாருதி சுஸுகி ஆல்ட்டோ

நம்பர்-1 இடத்தில் மாருதி ஆல்ட்டோ கார் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 64,573 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 56,335 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. மாருதியின் விற்பனையில் மிகப்பெரிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது ஆல்ட்டோ. முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும், பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லாமல் தேர்வு செய்யும் மாடலாக வலம் வருகிறது. குறைந்த பராமரிப்பு, சிறந்த எரிபொருள் சிக்கனம் போன்றவையும் ஆல்ட்டோவை தொடர்ந்து முன்னிலை பெற வைத்துள்ளது.

Most Read Articles
English summary
There have been many vehicles that were best sellers. Few models like Hyundai Santro, the Verna and even the Maruti Ritz which were among the top 10 best selling cars have been shaken off the list. Now, lets take a look at the country's top selling vehicles this year according to data provided by Society of Indian Automobile Manufacturers (SIAM).
Story first published: Thursday, July 24, 2014, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X