கடந்த டிசம்பரில் டாப்- 10 இடத்தை பிடித்த கார் மாடல்கள்

By Saravana

அனைவரும் புத்தாண்டு பிறப்பை ஆவலோடு எதிர்பார்த்து கார் வாங்குவதை ஒத்திப் போட்டதால், வழக்கம்போல் ஆண்டு கடைசியான டிசம்பரில் கார் விற்பனை மிக மந்தமாகவே இருந்தது. டாப்-10 பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், ஒரு சில மாடல்களை தவிர பல கார் மாடல்களின் விற்பனை சரிவை சந்தித்தன.

இருப்பினும், சில கார் மாடல்கள் வழக்கம்போல் மார்க்கெட்டில் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்தன அதேவேளை, ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்கள் டாப்-10 இடத்திலிருந்து கீழே இறங்கின. கடந்த ஆண்டின் மிக முக்கியமான மாடல்களில் ஒன்றான ரெனோ டஸ்ட்டர் டாப்-20 லிஸ்ட்டில் இருந்து காணாமல் போனது. மேலும், முதல் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி கார்கள் பிடித்தன.

மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ

ஆல்ட்டோ கார்களின் விற்பனை வழக்கம்போல் நல்ல பங்களிப்பை மாருதிக்கு வழங்கியதுடன், பட்டியலில் முதல் இடத்தை பெற்றது. அதேவேளை, கடந்த ஆண்டு நவம்பரில் 23,024 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் 23,823 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகின. சிறிதளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

 மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

பட்டியலில் வழக்கம்போல் 2வது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் தக்க வைத்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 15,734 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த டிசம்பரில் மாதம் 16,788 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையானது.

 மாருதி டிசையர்

மாருதி டிசையர்

மாருதி டிசையர் விற்பனை தொடர்ந்து 3வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 15,286 டிசையர் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 15,427 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

டாப்-10 பட்டியலில் வழக்கம்போல் தனது ஆஸ்தான இடமான 4ல் அழுத்தமாக அமர்ந்தது மாருதி வேகன் ஆர் கார். 2013 நவம்பரில் 12,815 கார்கள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் அதைவிட குறைவாகன 12,154 கார்கள் மட்டுமே விற்பனையானது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் 11,000க்கும் அதிகமான கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 9,077 கிராண்ட் ஐ10 கார்கள் மட்டுமே விற்பனையானது. இருப்பினும், பட்டியலில் 5வது இடத்தை பிடித்ததுடன், ஹூண்டாய் நிறுவனத்துக்கு தொடர்ந்து நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறது.

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ

டாப்-10 பட்டியலில் 5 மற்றும் 6ம் இடத்திற்கு மாறி மாறி இருந்து வரும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி கடந்த மாதம் 6ம் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 8,474 பொலிரோ எஸ்யூவிகளை விற்பனை செய்த மஹிந்திரா கடந்த மாதம் 8,465 பொலிரோக்களை விற்றுள்ளது. எண்ணிக்கையில் சிறிது பின்தங்கினாலும், மஹிந்திராவின் தூணாக தொடர்ந்து தன்னை பரைசாற்றி வருகிறது பொலிரோ.

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

மெது மெதுவாக பல முன்னணி கார் மாடல்களை ஓரம் கட்டிவிட்டு டாப்-10 பட்டியலுக்குள் மிக முக்கிய இடத்தை மாருதி ஓம்னி பிடித்தது. கடந்த நவம்பர் மாதம் ஹோண்டா அமேஸ் வசம் இருந்த 7ம் இடத்தை மாருதி ஓம்னி பிடித்தது. கடந்த மாதம் 5,590 ஓம்னி மினி வேன்களை மாருதி விற்பனை செய்தது.

 ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் தொடர்ந்து 8வது இடத்தை தக்க வைத்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 6,340 இயான் கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய் கடந்த மாதம் 5,428 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா தொடர்ந்து 9வது இடத்திலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 5,840 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 4,924 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

 டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

டாப்-10 பட்டியலில் கடைசி இடத்தை டொயோட்டா இன்னோவா பெற்றது. கடந்த மாதம் 4,918 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனையாகின. கடந்த டிசம்பரை முந்தைய ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, விற்பனை 23 சதவீதம் சரிந்தது.

காணவில்லை...

காணவில்லை...

டாப்-10 பட்டியலில் ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ஆகிய மிக முக்கிய மாடல்கள் இடம்பிடிக்கவில்லை. கடந்த மாதம் 4,458 அமேஸ் கார்களும், 3,905 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளும் விற்பனையாகின. 3,418 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்து டாப்-20 பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், இந்த பட்டியலில் கூட இடம் கிடைக்காமல் ரெனோ டஸ்ட்டர் வெளியில் தள்ளப்பட்டது.

Most Read Articles
 
English summary
Here is the top 10 list of cars sold in India during the month of December 2013.
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X