அக்டோபரில் டாப் - 10 கார்கள்... 6 இடங்கள் மாருதிக்கு...!!

கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரப்படி, டாப் - 10 பட்டியலில் 6 இடங்களை மாருதி கார்கள் கைப்பற்றியுள்ளன. தீபாவளி பண்டிகையின்போது கார் விற்பனை நல்ல வளர்ச்சி பெறும் என்று காத்திருந்த நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பல கார் நிறுவனங்களுக்கு எதிர்பார்த்தபடி அமையாததோடு, விற்பனை சரிவையும் சந்தித்தது. அத்துடன் மாருதியின் வெற்றிகரமான மாடலான ஸ்விஃப்ட் கார் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும், அந்த நிறுவனத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அக்டோபர் மாத விற்பனை பட்டியலில் எந்தெந்த கார்கள் எந்த இடங்களை பிடித்தன என்ற விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


பட்டியல்

பட்டியல்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப் 10 கார் மாடல்களை காணலாம்.

10. ஹோண்டா சிட்டி

10. ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் 5,120 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகின. மேலும், கடந்த மாத விற்பனையில் சியாஸ் காரைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே சிட்டி கார்கள் விற்பனையாகின. குர்கான் ஆலையிலிருந்து ராஜஸ்தானிலுள்ள ஆலைக்கு சிட்டி கார் உற்பத்தியை மாற்றியதால், ஹோண்டா சிட்டி விற்பனை சரிந்தது. இந்தநிலையில், வரும் மாதங்களில் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களுக்கு இடையில் உண்மையான போட்டியை காணலாம்.

ஹோண்டா சிட்டி முழு விபரம்

9. மாருதி செலிரியோ

9. மாருதி செலிரியோ

ஒன்றுமில்லாமல் இருந்த ஏ - ஸ்டார் மற்றும் எஸ்டீலோவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட செலிரியோ கார் மாருதியின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், டாப் - 10 பட்டியலிலும் இடம்பிடித்து மாருதிக்கு பக்கபலமாக நிற்கிறது. கடந்த மாதம் 5,723 செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. செலிரியோவின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதும் இந்த காரின் விற்பனை ஸ்திரமாக இருந்து வருவதற்கு காரணம்.

மாருதி செலிரியோ முழு விபரம்

8. மாருதி சியாஸ்

8. மாருதி சியாஸ்

எதிர்பார்த்தபடியே, மாருதிக்கு மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முன்னிலை பெறுவதற்கு சியாஸ் உதவிபுரிந்துள்ளது. கடந்த மாதம் 6,345 சியாஸ் கார்களை மாருதி விற்பனை செய்தது. அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு பின்னரே இதன் உண்மையான விற்பனை நிலை என்ன என்பது தெரிய வரும். ஆனால், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னாவுக்கு கடும் போட்டியை சியாஸ் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

மாருதி சியாஸ் முழு விபரம்

7. ஹூண்டாய் இயான்

7. ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் கார் கடந்த மாதம் 7ம் இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 6,986 இயான் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த செக்மென்ட்டில் மாருதி ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு இடையில் மட்டுமே போட்டி நிலவுகிறது. பிற மாடல்கள் இந்த கார் மாடல்களை தொட்டுக்கூட பார்க்க முடியாத நிலை இருக்கிறது.

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் 8,400 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை கிராண்ட் ஐ10 கார் மூலம் ஸ்திரமாகியிருப்பதை மாதாமாதம் இந்த காரின் விற்பனை காட்டி வருகிறது.

5. ஹூண்டாய் எலைட் ஐ20

5. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் ஹூண்டாய் ஐ20 கார் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. அக்டோபரில் 8,895 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. மேலும், மாருதி மாடல்களுக்கு அடுத்ததாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

4. மாருதி ஸ்விஃப்ட்

4. மாருதி ஸ்விஃப்ட்

டாப் - 10 பட்டியலில் 6 இடங்களை தனது கார் மாடல்கள் கைப்பற்றினாலும், மாருதிக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருப்பது ஸ்விஃப்ட் கார் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டதுதான். கடந்த மாதம் 11,965 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருகைக்காக பலர் தாமதித்ததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். எனவே, வரும் மாதங்களில் மீண்டும் இரண்டு அல்லது மூன்றாவது இடத்துக்கு முன்னேறுமா என்பதை பார்க்கலாம்.

மாருதி ஸ்விஃப்ட் முழு விபரம்

3. மாருதி வேகன் ஆர்

3. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதம் 14,310 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்தது. தீபாவளி பண்டிகையின்போது சராசரியைவிட கூடுதல் விற்பனையை பதிவு செய்த மாடல்களில் வேகன் ஆர் காரும் ஒன்று.

மாருதி வேகன் -ஆர் முழு விபரம்

2. மாருதி டிசையர்

2. மாருதி டிசையர்

கடந்த மாதம் 16,542 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. மாதாமாதம் 18,000 முதல் 20,000 வரையிலான எண்ணிக்கையில் இருந்து வந்த மாருதி டிசையர் விற்பனை சற்று சரிந்திருப்பதற்கான காரணம் ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஸெஸ்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களின் போட்டியாகத்தான் இருக்க முடியும். இந்த நிலையில், அடுத்த மாதம் மாருதி டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, புத்தாண்டுக்கு பின்னர் இந்த காரின் விற்பனை மீண்டும் தனது பழைய நிலையை அடையுமா என்பதை பார்க்கலாம்.

மாருதி டிசையர் முழு விபரம்

1. மாருதி ஆல்ட்டோ

1. மாருதி ஆல்ட்டோ

மாருதி நிறுவனத்துக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் ஆல்ட்டோ காரின் விற்பனை கடந்த மாதம் 20,000ஐ தாண்டியது. கடந்த மாதம் 21,443 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. தற்போது ஆல்ட்டோ கே10 காரில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலும் வந்திருப்பதால், ஆல்ட்டோ பிராண்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மாருதி ஆல்ட்டோ முழு விபரம்

ஆதிக்கம்

ஆதிக்கம்

டாப் - 10 பட்டியலில் 9 இடங்களை மாருதி, ஹூண்டாய் கார்கள் பிடித்துள்ளன. பிற தயாரிப்பாளர் மாடல் என்று பார்க்கப்போனால் ஹோண்டா சிட்டி மட்டுமே டாப் - 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. நவம்பரில் இந்த பட்டியலில் அதிக மாற்றங்கள் நிகழுமா, பிற தயாரிப்பு நிறுவனங்களின் இடம்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Car makers suffered post-festive season pangs in October with major companies reporting decline in domestic sales. Here is the top 10 cars sold in October 2014. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X