காருக்கு வேண்டிய கட்டாய ஆக்சஸெரீஸ்கள் மற்றும் வசதிகள்!

நாளுக்கு நாள் காருக்கான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே வரும் இன்றைய சூழ்நிலையில், காருக்கு அதி முக்கியமான சில வசதிகள் இருப்பது இன்றிமையாததாக இருக்கிறது. கார் பாதுகாப்புக்கு இந்த ஆக்சஸெரீஸ்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளும், ஆக்சஸெரீஸ்களும் முன்னணி மாடல்களின் டாப் வேரியண்ட்டில் நிரந்தர அம்சங்களாக கிடைக்கின்றன. சில ஆக்சஸெரீஸ்கள் தனியாகவும் வெளி மார்க்கெட்டில் வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அதுபோன்று, காரில் இருக்க வேண்டிய சில முக்கிய வசதிகளையும், ஆக்சஸெரீஸ்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


காருக்கு தேவையான ஆக்சஸெரீஸ்கள்

காருக்கு தேவையான ஆக்சஸெரீஸ்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காருக்கு தேவையான முக்கிய ஆக்சஸெரீஸ்கள் மற்றும் வசதிகள் பற்றிய தகவல்களை காணலாம். ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களில் இருக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பதைத்தான் சுருக்கமாக ஏபிஎஸ் என்று அழைக்கின்றனர். தற்போது வரும் கார் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாகவும், டாப் வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது. அவசரத்திற்கு பிரேக் பிடிக்கும்போது ஆபத்பாந்தவனாக ஏபிஎஸ் செயல்படுகிறது. சக்கரங்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதுடன், அவசரத்தில் பிரேக்கை பிடித்தாலும், சறுக்கிச் செல்லாமல் வீல்களுக்கு சரியான விகிதத்தில் பவரை செலுத்தி குறைந்த தூரத்தில் காரை நிறுத்தும் அமைப்புதான் ஏபிஎஸ். விபத்துக்களை தவிர்க்க உதவும் அமைப்பாக செயல்படுகிறது. இதில் ஒரு சில பாதகங்களும் உள்ளன. சரளை கற்கள், மணல் மற்றும் பனி மூடிய சாலைகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்காது.

புளுடூத்/ ஹேண்ட்ஸ்ஃப்ரீ

புளுடூத்/ ஹேண்ட்ஸ்ஃப்ரீ

காரில் மியூசிக் சிஸ்டம் மற்றும் போன் அழைப்புகளை இணைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் புளுடூத் வசதி அல்லது ஹேண்ட்ஸ்ஃப்ரீ சாதனங்கள் பயன்படுகின்றன. வாய்மொழி உத்தரவுகளால் போன் அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கும், மியூசிக் சிஸ்டத்தை இயக்குவதற்கும் இவை பயன்படுகின்றன. தற்போது வரும் புதிய மாடல்களில் இந்த வசதி கொடுக்கப்படுகிறது. அப்படியில்லாவிட்டாலும் தனியாக புளுடூத் கிட் வாங்கியும் பொருத்திக் கொள்ளலாம்.

பவர் அவுட்லெட்

பவர் அவுட்லெட்

சென்டர் கன்சோலில் மொபைல்போன் சார்ஜ் செய்வதற்கு ஏதுவாகவும், லைட்டருக்கும் தேவைப்படும் பவர் அவுட்லெட் கொடுக்கப்படுகிறது. பயணங்களின்போது இது வெகுவாக பயன்படும்.

ஏர்பேக்

ஏர்பேக்

பெருகி வரும் வாகன நெருக்கத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏர்பேக்குகள் என்று அழைக்கப்படும் உயிர் காக்கும் காற்றுப்பைகள் மிக முக்கிய பயனுள்ளதாக இருக்கும். 15 கிமீ வேகத்துக்கு மேல் வாகனம் செல்லும்போது விபத்தில் சிக்கினால் பயணிகளை காக்கும் வகையில் விரிவடையும் உயிர்காக்கும் காற்றுப்பைகள் தற்போது மிக அவசியமான பாதுகாப்பு அம்சமாக உள்ளது. பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்படுவதையும், மிக மோசமான காயங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கும் வகையிலான அமைப்பாக செயல்படுகிறது. விபத்தின்போது சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்தால் காற்றுப்பைகளால் பயணிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, ஸ்டீயரிங் வீலிலிருந்து 10 இஞ்ச் தூரத்தில் சரியான கோணத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே ஏர்பேக்கால் பயன் கிடைக்கும். ஏர்பேக் பொருத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை முன்புறம் அமர வைப்பதை தவிர்க்கவும். இல்லாவிடில், ஏர்பேக்கை ஆஃப் செய்து வைக்கவும்.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

பனிப்பொழிவு அதிகமிருக்கும்போது ஹெட்லைட்டின் ஒளி பனித் திவளைகளின் மீது பட்டு எதிரொலிக்கும். இது எதிரில் வருவோர்க்கும், காரை ஓட்டுபவருக்கும் கண் கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே, பனிக்காலங்களில் அதிக அலை நீளம் கொண்ட மஞ்சள் நிற ஒளிக்கற்றைகளை வழங்கும் பனி விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும். தாழ்வாக பொருத்தப்பட்டிருப்பதால் தரையை பார்த்து ஓட்டுவதற்கு போதுமான வெளிச்சத்தை தரும்.

ரியர் பார்க்கிங் சென்சார்

ரியர் பார்க்கிங் சென்சார்

காரை ரிவர்ஸ் செய்யும்போது பின்னால் இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மிக அவசியமான ஆக்சஸெரீயாக குறிப்பிடலாம். தனியாக வாங்கியும் பொருத்திக்கொள்ளலாம். இதுதவிர, ரியர் வியூ கேமராவும் இருந்தால் கூடுதல் பாதுகாப்பு.

இருக்கை

இருக்கை

டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி மிக முக்கியமானது. அப்போதுதான், டிரைவர் மிக சவுகரியமாக அமர்ந்து சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட முடியும். இந்த ஆக்சஸெரீயும் மிக முக்கியமானதாக குறிப்பிடலாம்.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

அழகுக்கு அழகு சேர்ப்பதோடு, இலகு எடையுடன் உறுதியானதாகவும் இருப்பதால் அலாய் வீல்களுக்கு மவுசு அதிகம். சிறந்த பிரேக்கிங் செயல்திறனையும் வழங்குகின்றன. தற்போது டாப் வேரியண்ட்டுகளில் நிரந்தர ஆக்சஸெரீயாக அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. வெளிமார்க்கெட்டிலும் அலாய் வீல்களை வாங்கி பொருத்திக் கொள்ள முடியும். சாதாரண ரிம் வீல்களை காட்டிலும் பன்மடங்கு கூடுதல் விலை கொண்டது.

கன்ட்ரோல் சுவிட்சுகள்

கன்ட்ரோல் சுவிட்சுகள்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இருப்பதன் மூலம் தேவையில்லாத கவனக் குறைவு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல்

அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல்

டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் வசதி இப்போது அனேக கார்களில் கொடுக்கப்படுகின்றன. டில்ட் ஸ்டீயரிங் வசதியில் ஸ்டீயரிங் காலமை மேலே, கீழே அட்ஜெஸ்ட் செய்ய முடியும். டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் வசதியில் ஸ்டீயரிங் வீலை உங்களுக்கு முன்புறம், பின்புறமும் தள்ளி அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம். கார்களில் டில்ட் ஸ்டீயரிங் இருப்பதும் அவசியம். ஓட்டுபவர் சரியான விதத்தில் ஸ்டீயரிங் மாற்றிக் கொண்டு சவுகரியமாக ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.

Most Read Articles
English summary
Knowing key vehicle features and making sure these features are a part of the vehicle we purchase. Let us us go through a small list of some features that we think are essential for Indian conditions. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X