ஜூலை விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் மாடல்கள்!

By Saravana

கடும் சரிவு கண்டு வந்த கார் மார்க்கெட் கடந்த சில மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது கார் தயாரிப்பாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றமாக டீசல் கார்களை ஒப்பிடும்போது பெட்ரோல் கார்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் ஆல்ட்டோ காரை பின்னுக்குத் தள்ளி விற்பனையில் நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கிறது மாருதி டிசையர். வழக்கம்போல் முதல் 4 இடங்கள் மாருதி தயாரிப்புகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. விற்பனையில் முன்னிலை வகித்த கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.


பட்டியல்

பட்டியல்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கார் மாடல்களின் விபரங்களை காணலாம்.

10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

கடந்த மாதம் விற்பனையில் முன்னிலை வகித்த கார் மாடல்களின் பட்டியலில் ஹோண்டா அமேஸ் 10வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 4,507 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஹோண்டா அமேஸ் கார் 7வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

9. ஹூண்டாய் இயான்

9. ஹூண்டாய் இயான்

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5வது இடத்தில் இருந்த ஹூண்டாய் இயான் கார் கடந்த மாதம் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 6,035 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்தது.

8. மாருதி செலெரியோ

8. மாருதி செலெரியோ

மாருதியின் புதிய கார் மாடலான செலெரியோ குறிப்பிட்டத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த மாதம் 6,394 செலெரியோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

 7. ஹூண்டாய் எக்ஸென்ட்

7. ஹூண்டாய் எக்ஸென்ட்

ஹூண்டாயின் புதிய காம்பேக்ட் செடான் காரான ஹூண்டாய் எக்ஸென்ட் கார் 7வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 6,652 ஹூண்டாய் எக்ஸென்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

 6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் 6வது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் இருக்கிறது. கடந்த மாதத்தில் 7,023 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

5.ஹோண்டா சிட்டி

5.ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் 5வது இடத்தில் ஹோண்டா சிட்டி கார் இருக்கிறது. கடந்த மாதம் 7,705 சிட்டி கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

 4.மாருதி வேகன் ஆர்

4.மாருதி வேகன் ஆர்

வழக்கம்போல் மாருதி வேகன் ஆர் தனது ஆஸ்தானமான 4வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் மாருதி வேகன் ஆர் கார் 11,762 கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

 3. மாருதி ஸ்விஃப்ட்

3. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் கார் 3வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 15,703 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

 2. ஆல்ட்டோ

2. ஆல்ட்டோ

நம்பர்-1 ஆக இருந்து வந்த ஆல்ட்டோவின் விற்பனை தடுமாற்றம் கண்டுள்ளது. கடந்த மாதம் தனது பங்காளியான டிசையரிடம் முதலிடத்தை கோட்டைவிட்டது. கடந்த மாதம் 16,997 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்தது.

நம்பர்-1

நம்பர்-1

கடந்த மாதம் மாருதி டிசையர் காம்பேக்ட் செடான் கார் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. மே மாதத்துக்கு பின்னர் மீண்டும் ஜூலையில் ஆல்ட்டோ காரை கீழே இறக்கி நம்பர்-1 மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த மாதம் 18,634 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்தது.

காம்பேக்ட் செடான்களுக்கு வரவேற்பு

காம்பேக்ட் செடான்களுக்கு வரவேற்பு

காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகமாக இருப்பது புள்ளிவிபரங்கள் மற்றும் பட்டியல் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki's compact sedan Swift Dzire reclaimed the passenger car sales crown for July.
Story first published: Thursday, August 21, 2014, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X