செப்டம்பர் விற்பனையில் டாப்- 20 இடங்களை பிடித்த கார்கள்!

By Saravana

பண்டிகை காலத்தின் உற்சாகத்தை காட்டும் வகையில், கடந்த மாதம் பல முன்னணி கார் நிறுவனங்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளன. மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

அதேவேளை, சில கார் நிறுவனங்கள் தொடர்ந்து தடுமாறி வருவது விற்பனை பட்டியலிலிருந்து தெரிய வருகிறது. கடந்த மாதம் விற்பனையில் டாப்-20 இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


 1.மாருதி ஆல்ட்டோ

1.மாருதி ஆல்ட்டோ

வழக்கம்போல் மாருதி ஆல்ட்டோ கார் முதலிடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 19,906 ஆல்ட்டோ கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது ஆல்ட்டோ காரின் விற்பனை கடுமையாக சரி்ந்துள்ளது.

2.மாருதி டிசையர்

2.மாருதி டிசையர்

மாருதி டிசையர் கார் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 18,185 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடும்போது, விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

3.மாருதி ஸ்விஃப்ட்

3.மாருதி ஸ்விஃப்ட்

மூன்றாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் அமர்ந்துள்ளது. செப்டம்பரில் 17,265 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட விற்பனை சிறிதளவு உயர்ந்துள்ளது.

4.மாருதி வேகன் ஆர்

4.மாருதி வேகன் ஆர்

தனது ஆஸ்தான இடமான 4ம் இடத்தில் வேகன் ஆர் அமர்ந்துள்ளது. கடந்த மாதம் 15,641 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரை விட விற்பனை சிறிது உயர்ந்துள்ளது.

5.ஹூண்டாய் எலைட் ஐ20

5.ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது விற்பனை மூலம் தெரிய வந்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே 5ம் இடத்திற்கு முன்னேறியது ஹூண்டாய் எலைட் ஐ20 கார். கடந்த மாதத்தில் 8,903 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையை ஒப்பிடும்போது, 50 சதவீதத்திற்கும் மேல் விற்பனை அதிகரித்துள்ளது.

6.மஹிந்திரா பொலிரோ

6.மஹிந்திரா பொலிரோ

எத்தனை புதிய மாடல்களை கொண்டு வந்து இறக்கினாலும், ஆட்ட முடியாத, அசைக்க முடியாத வகையில் விற்பனையில் சாதித்து வருகிறது மஹிந்திரா பொலிரோ. கடந்த மாதம் ஆறாம் இடத்தை பிடித்தது. செப்டம்பரில் 8,541 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் ஏழாவது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் உள்ளது. கடந்த மாதம் 7,285 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரை விட விற்பனை குறைந்துள்ளது.

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

கடந்த மாதம் டாப்-10 கோட்டையில் புகுந்து அசத்தியுள்ளது மாருதி ஓம்னி. கடந்த மாதம் 6,659 ஓம்னி மினி வேன்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது 23.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

கடந்த மாதம் 6,489 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. டாப்-10 பட்டியலில் தாக்குப்பிடித்து வரும் இயான் காரின் விற்பனை கடந்த ஆண்டைவிட சிறிது உயர்ந்திருப்பது ஹூண்டாய்க்கு ஆறுதல்.

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ

டாப்-10 பட்டியலில் கடைசி இடத்தில் மாருதி செலிரியோ கார் உள்ளது. கடந்த மாதம் 6,382 செலிரியோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்-20 வரை பட்டியல் நீள்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

டாப்-20 பட்டியலில் பதினோறாவது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 6,060 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இதில், பழைய மற்றும் புதிய மாடல்கள் அடக்கம். மேலும், கடந்த ஆண்டைவிட ஸ்கார்ப்பியோவின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

12.டொயோட்டா இன்னோவா

12.டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா 12வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 5,876 இன்னோவா கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது.

 13.மாருதி எர்டிகா

13.மாருதி எர்டிகா

கடந்த மாதம் 5,678 மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகியுள்ளன. இன்னோவாவைவிட விற்பனையில் எர்டிகா பின்தங்கியது மாருதிக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

14.ஹோண்டா மொபிலியோ

14.ஹோண்டா மொபிலியோ

முதல் மாதத்தில் எர்டிகாவை போட்டுத் தாக்கிய ஹோண்டா மொபிலியோ இரண்டாவது மாதத்தில் சிறிது பின்தங்கியது. கடந்த மாதம் 5,329 மொபிலியோ கார்களை ஹோண்டா கார் நிறுவனம் விற்பனை செய்தது.

15.மாருதி ஈக்கோ

15.மாருதி ஈக்கோ

டாப்-20 பட்டியலில் 15வது இடத்தில் மாருதி ஈக்கோ இடம்பிடித்தது. கடந் மாதம் 5,204 ஈக்கோ கார்களை மாருதி விற்பனை செய்தது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

டாப்-20 பட்டியலில் பதினாறாவது இடத்தில் இருக்கும் ஹோண்டா சிட்டி கார் மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த மாதம் 4,599 சிட்டி கார்கள் விற்பனையாகின. மேலும், இடையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக வரும் மாதங்களில் விற்பனையில் பின்தங்க வாய்ப்புண்டு. மறுபுறமும் புதிய மாருதி சியாஸ் காரின் வரவும் சிட்டி விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

17. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

17. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

கடந்த மாதம் 4,515 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டைவிட விற்பனை 27 சதவீதம் வரை குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

18.ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

18.ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

4 மீட்டருக்கும் குறைவான செடான் காராக வந்த ஹூண்டாய் எக்ஸ்சென்ட் டாப்-20 பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 4,481 கார்கள் விற்பனையானது. மேலும், செப்டம்பரில் ஹோண்டா அமேஸ் காரை விற்பனையில் முந்தியது எக்ஸ்சென்ட்.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

செப்டம்பரில் 3,848 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு செப்டம்பரைவிட விற்பனை 42 சதவீதம் குறைந்துவிட்டது. மேலும், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் வரவால் விற்பனையில் பின்தங்கியுள்ளது.

20.ரெனோ டஸ்ட்டர்

20.ரெனோ டஸ்ட்டர்

கடந்த மாதம் 3,410 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனையாகின. இதன்மூலம், டாப்-20 பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், விற்பனை 14 சதவீதம் வரை குறைந்தது.

Via- Team BHP

Most Read Articles
English summary

 Now, lets take a look at the country's top selling vehicles this year according to data provided by Society of Indian Automobile Manufacturers (SIAM).
Story first published: Monday, October 13, 2014, 14:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X