இந்தியாவின் டாப்- 5 கார் தயாரிப்பாளர்கள் யார் தெரியுமா?

By Saravana

கடந்த இரு ஆண்டுகளாக கார் மார்க்கெட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை. மந்தமான போக்கு நிலவுகிறது. இருந்தாலும், சில கார் நிறுவனங்கள் பல சவால்களை முறியடித்து நல்ல விற்பனையை பதிவு செய்து வருகின்றன.

அந்த வகையில், கடந்த மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த டாப்- 5 கார் தயாரிப்பாளர்களின் விபரங்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம். டாப்-5 லிஸ்ட்டில் ஜப்பானிய நிறுவனங்களின் கை மேலோங்கி நிற்கிறது.


ஜப்பானிய ஆதிக்கம்

ஜப்பானிய ஆதிக்கம்

டாப்-5 லிஸ்ட்டில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கார் நிறுவனங்களுக்கு இடமளிக்காமல் தொடர்ந்து ஜப்பானிய மற்றும் கொரிய கார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்- 5 கார் தயாரிப்பாளர்களின் விபரங்களை காணலாம்.

 5-ஆம் இடத்தில்...

5-ஆம் இடத்தில்...

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 11,833 கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இது டொயோட்டாவுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

 4-ஆம் இடத்தில்...

4-ஆம் இடத்தில்...

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா நான்காம் இடத்தில் உள்ளது. செடான் கார்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கும் ஹோண்டா கடந்த மாதம் 13,362 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 11,342 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் தற்போது கூடுதல் கார்களை விற்பனை செய்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 3-ஆம் இடத்தில்...

3-ஆம் இடத்தில்...

உள்நாட்டு கார் தயாரிப்பாளரான மஹிந்திரா மூன்றாம் இடத்தில் உள்ளது. டாப்-5 லிஸ்ட்டில் இடம்பெற்ற ஒரே உள்நாட்டு நிறுவனமும் கூட. கடந்த மாதம் 18,085 வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 22,244 வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 3-ஆம் இடத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டைவிட விற்பனை குறைந்துள்ளதால் முழு மகிழ்ச்சியுடன் அந்த நிறுவனம் இருக்கவில்லை.

 2-ஆம் இடத்தில்...

2-ஆம் இடத்தில்...

தனது ஆஸ்தான இரண்டாமிடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் தொடர்ந்து தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 32,102 கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய், கடந்த மாதம் 36,205 கார்களை விற்பனை செய்து 12.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 நம்பர்-1

நம்பர்-1

வழக்கம்போல் மாருதி தனது நம்பர்-1 இடத்தை யாருக்கும் தராமல் எட்ட முடியாத உயரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. செலிரியோ வரவும் மாருதியின் விற்பனையில் கூடுதல் வளர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு உள்நாட்டில் 77,821 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 90,560 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 16.4 சதவீதம் கூடுதலாகும். இது மாருதிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Most Read Articles
English summary
We have analysed the details and have prepared a list of the top five manufacturers with the best sales report for May, 2014. It is no surprise to us that the list has a mix of Japanese, South Korean as well as Indian manufacturers in it.
Story first published: Wednesday, June 4, 2014, 14:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X