மார்க்கெட் பங்களிப்பில் முன்னிலை வகிக்கும் இந்தியாவின் டாப் கார் நிறுவனங்கள்!

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க பல முன்னணி நிறுவனங்கள் மத்தியில் போட்டோ போட்டி நடக்கிறது. முதல் இரண்டு இடங்களில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் வலுவான மார்க்கெட் பங்களிப்புடன் ஆசனம் போட்டு அமர்ந்து விட்டன.

இந்த நிலையில், அடுத்தடுத்த இடங்களுக்கு கடும் போட்ட நடக்கிறது. சலுகைகள், புதிய மாடல்கள், டீலர் விரிவாக்கம் என வாடிக்கையாளர்களை கவர்ந்து தங்களது மார்க்கெட் பங்களிப்பை அதிகரித்துக் கொள்ள அனைத்து நிறுவனங்களும் கடும் பிரயேத்னங்களை செய்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையில், அதிக மார்க்கெட் பங்களிப்பை கொண்டுள்ள டாப் கார் நிறுவனங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


மார்க்கெட் பங்களிப்பு

மார்க்கெட் பங்களிப்பு

உள்நாட்டு விற்பனையில் கார் நிறுவனங்களின் மார்க்கெட் பங்களிப்பின் அடிப்படையில் நிறுவனங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

8. செவர்லே

8. செவர்லே

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான செவர்லே பிராண்டு எட்டாவது இடத்தில் உள்ளது. ஜனவரி- ஜூன் இடையிலான முதல் அரையாண்டில் செவர்லே நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு 2.70 சதவீதம். ஆனால், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3.71 சதவீதமாக இருந்த இந்த மார்க்கெட் பங்களிப்பு தற்போது 27.28 சதவீதம் குறைந்துவிட்டது.

7.ஃபோர்டு

7.ஃபோர்டு

ஈக்கோஸ்போர்ட் கொடுத்த உற்சாகம் காரணமாக ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு 32.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி- ஜூன் இடையிலான காலத்தில் 2.45 சதவீதமாக இருந்த சந்தை பங்களிப்பு இந்த ஆண்டு 3.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

மூன்றாம் இடத்திலிருந்து படிப்படியாக ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது டாடா மோட்டார்ஸ். புதிய மாடல்கள் அறிமுகப்படுத்த தவறியதும், வர்த்தக கொள்கை, விற்பனைக்கு பிந்தைய செயல்பாடுகளில் போதிய கவனம் செலுத்தாதும் டாடா மோட்டார்ஸ் படு வேகமாக பின்னேறி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி- ஜூன் இடையிலான மாதத்தில் 5.75 சதவீதமாக இருந்த மார்க்கெட் பங்களிப்பு, நடப்பாண்டின் அதே காலக்கட்டத்தில் 4.86 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த நிலையில், புதிய ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்கள் மூலம் மீண்டும் உத்வேகம் பெறுவோம் என்று அடித்துக் கூறுகிறது டாடா மோட்டார்ஸ்.

5.டொயோட்டா

5.டொயோட்டா

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டாவின் மார்க்கெட் பங்களிப்பு கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் 17.28 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஜனவரி - ஜூன் இடையிலான முதல் அரையாண்டில் 5.98 சதவீதமாக இருந்த மார்க்கெட் பங்களிப்பு, நடப்பு ஆண்டில் 4.94 சதவீதமாக குறைந்துவிட்டது.

4.ஹோண்டா கார்ஸ்

4.ஹோண்டா கார்ஸ்

பெட்ரோல் மாடல்களால் மார்க்கெட்டில் பின்தங்கி வந்த ஹோண்டா சியல் கார் நிறுவனம் புத்திசாலித்தனமாக அடுத்தடுத்த டீசல் மாடல்களை அறிமுகப்படுத்தி தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக அதிகரித்துக் கொண்டது. கடந்த ஆண்டு ஜனவரி- ஜூன் இடையில் 4.02 சதவீதமா இருந்த ஹோண்டா கார் நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு நடப்பாண்டின் அதே காலக்கட்டத்தில் 7.29 சதவீதமா அதிகரித்துள்ளது. இது 81.52 சதவீதம் அதிகம் என்பதும், படுவேகமாக மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக் கொண்ட நிறுவனமாகவும் மாறி போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

3.மஹிந்திரா

3.மஹிந்திரா

மூன்றாம் இடத்தில் மஹிந்திரா உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி- ஜூன் இடையிலான மாதங்களில் 13.73 சதவீதமாக இருந்த மஹிந்திராவின் மார்க்கெட் பங்களிப்பு தற்போது 9.28 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட மார்க்கெட் பங்களிப்பு 8.46 சதவீதம் குறைந்துள்ளது.

2.ஹூண்டாய் மோட்டார்ஸ்

2.ஹூண்டாய் மோட்டார்ஸ்

வழக்கம்போல் இரண்டாம் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை மூலம் 16.92 சதவீத மார்க்கெட் பங்களிப்பை ஹூண்டாய் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 15.90 சதவீதமாக இருந்த மார்க்கெட் பங்களிப்பு நடப்பாண்டின் முதல் அரையாண்டில் 8.46 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

1.மாருதி சுஸுகி

1.மாருதி சுஸுகி

கண்ணை மூடிக் கொண்டு நம்பர்- 1 மாருதி என கூறிவிடலாம். ஏனெனில், இந்திய கார் மார்க்கெட்டின் பாதி பங்களிப்பை கைவசம் வைத்துள்ளது மாருதி. கடந்த ஆண்டு ஜனவரி - ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் 43.83 சதவீதமாக இருந்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு நடப்பாண்டின் முதல் அரையாண்டில் 46.27 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் அரையாண்டில் மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு 5.56 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதர நிறுவனங்கள்

இதர நிறுவனங்கள்

ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா ஆட்டோ, நிசான், ரெனோ மற்றும் ஃபியட் ஆகிய நிறுவனங்களின் மொத்த மார்க்கெட் பங்களிப்பு 4.49 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 7.91 சதவீதமாக இருந்தது. அதாவது, 43.25 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Here are given top car manufacturers list in India based on the Market share.
Story first published: Saturday, August 2, 2014, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X