இந்தியாவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஐ-கோ கார்!

By Saravana

இந்தியாவில் புதிய குட்டிக் கார் மாடலை டொயோட்டா அறிமுகம் செய்ய இருப்பதாக நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த புதிய கார் மாடலை டொயோட்டாவும்- டைஹட்சூவும் இணைந்து தயாரிப்பதாக தெரிவித்திருந்தோம்.

இந்தநிலையில், ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐ- கோ காரை இந்தியாவில் டொயோட்டா அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கார் மாடல் ஆல்ட்டோ கே- 10 காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.


தயாரிப்பு

தயாரிப்பு

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டும் டொயோட்டா ஐ- கோ கார் செக் குடியரசு நாட்டில் டொயோட்டா- சிட்ரோவன் பீஜா நிறுவனத்தின் கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு டொயோட்டா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

வசதிகள் ஏராளம்

வசதிகள் ஏராளம்

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் டெயோட்டா ஐ- கோ கார் ஏராளமான வசதிகளை கொண்டது. இந்த காரில் வசதிகளை குறைத்து விலை குறைவான மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டெயோட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

டொயோட்டா ஐ- கோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வழங்கும். ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த ஹேட்ச்பேக் காரில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. தவிர, ஐரோப்பிய மார்க்கெட்டில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த காருக்கு அதிக அளவில் உள்நாட்டு உதிரிபாகங்களுடன் இந்தியாவில் அசெம்பிள் செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், வசதிகளை குறைத்து ஆல்ட்டோ கே10 காருக்கு இணையான விலையை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விற்பனையில் எழுச்சி

விற்பனையில் எழுச்சி

லிவா, எட்டியோஸ், இன்னோவா, ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை எட்டவில்லை. எனவே, புதிதாக ஒரு குட்டி காரை இறக்குவதன் மூலம் விற்பனை வளர்ச்சியை எட்டிவிட டொயோட்டா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Toyota offers its Aygo model in European countries and is their small car offering. The euro-spec hatchback is feature rich. We believe Toyota and Daihatsu could use this platform and strip it down on features to introduce it at an affordable price in India.
Story first published: Wednesday, November 12, 2014, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X