வேறவழி... இந்தியாவுக்காக சிறிய காரை தயாரிக்கும் டொயோட்டா!

By Saravana

இந்தியாவில் கரைசேர சிறிய கார் மார்க்கெட்டில் மிக வலிமையான வர்த்தகத்தை பெறுவது ஒவ்வொரு கார் நிறுவனத்துக்கும் அவசியமானதாக இருக்கிறது. இதனை தாமதமாக புரிந்துகொண்ட நிறுவனங்கள் சிறிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் அவசரம் காட்டுவது இயற்கை.

இந்தநிலையில், கார் விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டொயோட்டா கார் நிறுவனம் சிறிய கார் மாடலை களமிறக்குவதே புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்காக, தனது கீழ் செயல்பட்டு வரும் டைஹட்சூ நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய குட்டிக் கார் மாடலை தயாரித்து வருகிறது டொயோட்டா.

Toyota Car

எனவே, டொயோட்டா- டைஹட்சூ தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய கார் மாடல் மிகந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லிவா காரைவிட புதிய கார் குறைவான விலை கொண்டதாக இருக்கும். அதாவது, மாருதி ஆல்ட்டோவுடன் போட்டியிடும். அதேவேளை, மிக தரமான மாடலாக இதனை நிலைநிறுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், டொயோட்டா தயாரிப்புகள் இந்திய மக்களை கவர்ந்ததற்கு அதன் தரமும், நம்பகத்தன்மையும் மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவிலேயே இந்த புதிய கார் மாடலை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டிருப்பதால், மிக சரியான விலையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தகவல்.

டைஹட்சூ நிறுவனம் சிறிய கார் மாடல்களையும், ஆஃப்ரோடு வாகன தயாரிப்பிலும் புகழ்பெற்றது. ஜப்பானை சேர்ந்த மிக பழமையான கார் நிறுவனங்களில் ஒன்று டைஹட்சூ.

Most Read Articles
English summary
Toyota has decided its time to compete head on with its Japanese competitors. They are working together with Daihatsu on developing a small car vehicle. Daihatsu is most likely to engineer the small car by themselves and will receive Toyota badging, so it can be sold in their wide India network.
Story first published: Tuesday, November 11, 2014, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X