செம ஸ்டைலான புதிய லிவா கிராஸ்: டொயோட்டா அறிமுகப்படுத்துகிறது

By Saravana

இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா விற்பனை செய்து வரும் லிவா ஹேட்ச்பேக் கார் விரைவில் புதிய அவதாரம் பூண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடல் கிராஸ்ஓவர் ரகத்திலான காராக விரைவில் பிரவேசம் செய்ய உள்ளது. எட்டியோஸ் கிராஸ் என்ற பெயரில் வரும் இந்த புதிய கார் கடந்த நவம்பர் மாதம் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்த காரை இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வருகிறது டொயோட்டா. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ கிராஸ் போன்று இந்த காரும் லிவாவின் குடும்ப பெயரான எட்டியோஸை சேர்த்துக்கொண்டு எட்டியோஸ் கிராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது.

கம்பீர தோற்றம்

கம்பீர தோற்றம்

சாதாரண லிவா காரில் பல கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இணைத்து தோற்றத்தை மிக கம்பீரமாக மாற்றியிருக்கிறது டொயோட்டா. புதிய பம்பர், புதிய அலாய் டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு ஸ்கர்ட்டுகள், வீல் ஆர்ச் பேடிங்குகள், ரூஃப் ரெயில்கள் என வெளிப்புறத்தில் ஏராளமான ஆக்சஸெரீஸ்களை பெற்று ஒரு ஆஃப் ரோடு கார் போன்று மாறியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ லிவா காரில் பயன்படுத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடனும் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

 உட்புறம்

உட்புறம்

உட்புறத்தில் புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாற்றங்கள் செய்யப்படிருந்தாலும், சாதாரண மாடலைவிட பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது.

 கூடுதல் வசதி

கூடுதல் வசதி

இந்த காரின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் ரூஃப் ரெயிலில் 50 கிலோ வரை எடையை வைத்து எடுத்துச் செல்லும் வசதி இருக்கிறது. இது ஆஃப் ரோடு பிரியர்களுக்கு கூடுதல் வசதியை தரும்.

விலை

விலை

பிரேசிலில் விற்பனைக்கு வந்துள்ள எட்டியோஸ் கிராஸ் கார் இந்திய மதிப்பில் ரூ.12.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ கிராஸ் காரை மையமாக வைத்து விலை நிர்ணயம் செய்யப்படலாம். ஃபோக்ஸ்வேகன் போலோ கிராஸ் கார் ரூ.8.08 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Toyota Etios Liva, the only hatchback offered by Toyota Kirloskar Motor, the Indian subsidy of the Japanese auto giant will soon be seen in a new avatar. That of a crossover. Toyota Etios Cross as it will be called, will be launched at the Auto Expo 2014 in February.
Story first published: Friday, January 10, 2014, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X