பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்தியாவில் விற்பனையாகும் 10 எஸ்யூவிகளில் 7 டொயோட்டா ஃபார்ச்சூனராக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றன.

சொகுசு எஸ்யூவி மார்க்கெட் மந்தமடைந்துள்ள நிலையிலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான செக்மென்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் யாரும் பிடிக்க முடியாத இடத்தில் அசத்தி வருகிறது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

கடந்த 2009ம் ஆண்டு டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. அதுமுதல் இதுவரை மிகச் சிறந்த எஸ்யூவி மாடலாக வலம் வருகிறது. இதுவரை 57,500 ஃபார்ச்சூனர்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது.

 அம்சங்கள்

அம்சங்கள்

இந்திய சாலைகளுக்கு தகுந்தவாறு அதிக தரை இடைவெளி மற்றும் மிக கம்பீரமான டிசைன் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் வாடிக்கையாளர்களின் சிறந்த சாய்ஸாக உள்ளது. மேலும், தற்போது பல அரசியல்வாதிகளின் ஆஸ்தான வாகனமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் மாறியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

171 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் டி -4டி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபார்ச்சூனரில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்துவது குறித்து டொயோட்டா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

விலை

விலை

ரூ.22.23 லட்சம் விலையிலிருந்து 5 வேரியண்ட்டுகளில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கிடைக்கிறது.

 ஃபார்ச்சூனர் விபரம்

ஃபார்ச்சூனர் விபரம்

ஃபார்ச்சூனரின் விலை, அம்சங்கள், வசதிகள் பற்றிய விபரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X