இந்தியாவில் பட்ஜெட் கார்களை தயாரிக்க மாட்டோம்: டொயோட்டா

By Saravana

இந்தியாவில் பட்ஜெட் கார்களை தயாரிக்கும் திட்டம் இல்லை என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

இந்திய மார்க்கெட்டில் ரூ.4 லட்சம் பட்ஜெட்டிலான கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டட்சன் கோ, மாருதி ஆல்ட்டோ 800 உள்ளிட்ட கார்கள் நடுத்தர வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டை கனக்கச்சிதமாக நிறைவு செய்கின்றன.

Toyota Etios Cross

இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் பட்ஜெட் விலையிலான சிறிய கார்களை தயாரிக்குமா என்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கரிடம் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்கு, இந்தியாவில் பட்ஜெட் கார்களை தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அவர் கூறினார். தற்போது டொயோட்டா நிறுவனம் ரூ.4.80 லட்சம் விலையில் விற்பனை செய்யும் லிவா ஹேட்ச்பேக் கார்தான் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது.

எனவே, இதற்கு குறைவான விலை மாடலை டொயோட்டா அறிமுகம் செய்யாது என்பது உறுதியாகியுள்ளது.

Most Read Articles
English summary

 Toyota will not participate in the entry level budget hatchback segment in India, Vikram Kirloskar, vice-chairman, Toyota Kirloskar has confirmed.
Story first published: Monday, April 14, 2014, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X