டொயோட்டா கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் கணிசமாக குறைந்துள்ளது.

By Saravana

கடந்த சில மாதங்களாக பெங்களூர் அருகேயுள்ள டொயோட்டா ஆலையில் உற்பத்திப் பணிகள் முழு அளவில் நடைபெறவில்லை.

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Toyota Car

இதனால், டொயோட்டா கார்களுக்கான காத்திருப்பு காலம் குறைந்தது 2 மாதங்களுக்கு மேல் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஊதிய உயர்வு பிரச்னை குறித்து சுமூக தீர்வு காணும் முயற்சிக்கு தொழில்துறை குறைதீர் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, டொயோட்டா ஆலையில் தற்போது உற்பத்தி முழு அளவில் நடந்து வருகிறது. தற்போது டொயோட்டா கார்களுக்கான காத்திருப்பு காலம் 3 வாரங்களாக குறைந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 300 கார்கள் என்று இருந்த உற்பத்தி தற்போது 700 கார்களாக அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்பியுள்ளதால் உற்பத்தி சுமூகமாக நடந்து வருகிறது.

Most Read Articles
English summary
It's been over a month since the standoff between Toyota Kirloskar Motors and its workers came to an end and normalcy in production has slowly started to come about.
Story first published: Wednesday, June 4, 2014, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X