டிவிஎஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கார் ஷோரூம்...!!

By Saravana

நிஜ கார்கள் இல்லாமல், திரைகள் மூலம் கார்களின் டிசைன், தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துகொள்வதற்கான, புதிய டிஜிட்டல் கார் ஷோரூம்களை திறப்பதற்கு டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் சொகுசு கார் நிறுவனங்கள் இதுபோன்ற டிஜிட்டல் கார் ஷோரூம்களை திறந்துள்ளன. அதே கான்செப்ட்டில், ஆனால், சற்று வித்தியாசமான யோசனையுடன் இந்த டிஜிட்டல் கார் ஷோரூம்களை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

TVS Car Showroom

அதாவது, டிஜிட்டல் ஷோரூமில் நிஜ கார்கள் இருக்காது. இன்டர்நெட் இணைப்புடன் கூடிய திரைகளில் கார் மாடல்கள், அதன் சிறப்பம்சங்கள், இன்டிரியர் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் நேரில் காண்பது போன்ற உணர்வையும், தகவல்களையும் பெற முடியும்.

மேலும், இதுகுறித்து விளக்குவதற்காக விற்பனை பிரதிநிதிக்கு பதிலாக சிறப்பு ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காரை தலையில் கட்டும்படியாக நடந்துகொள்ளாமல், வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்களை விளக்குவதற்கு அவர்கள் உதவி செய்வர்.

மேலும், குறிப்பிட்ட மாடலை டிஜிட்டல் ஷோரூமில் தேர்வு செய்துவிட்டால், வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் வீட்டிற்கே டெஸ்ட் டிரைவ் கார் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

ரெனோ, மஹிந்திரா, அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற 150 டீலர்ஷிப்புகளை டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நடத்தி வருகிறது. இந்தநிலையில், கார் ஷோரூம்களை திறப்பதற்கும், அதனை நடத்துவதற்கான முதலீடுகளையும் வெகுவாக குறைக்கும் வகையில், இந்த புதிய முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

ஒரே ஒரு கார் பிராண்டு மட்டுமின்றி, பல்வேறு பிராண்டுகளின் கார்களை பற்றிய விபரங்களை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த கார் ஷோரூமாகவும் இதனை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த நிறுவனங்களுடன் இதுதொடர்பாக டிவிஎஸ் அண்ட் சன்ஸ் பேச்சு நடத்தி வருகிறது என்பது தெரியவில்லை.

Most Read Articles
English summary
South Indian automobile dealer TVS & Sons are taking car sales to the next level, by having no cars in its showrooms at all. TVS & Sons, instead will have TV screens and internet-enabled displays to see if customers would prefer choosing new cars this way.
Story first published: Saturday, December 27, 2014, 14:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X