ஹென்னிஸி வேனோம் ஜிடி.,யிடம் விட்ட பட்டத்தை மீட்டெடுக்க வரும் புதிய புகாட்டி வேரான்!

By Saravana

சூப்பர் கார் மாடல்களில் பென்ச் மார்க் காராக புகாட்டி வேரோன் விளங்குகிறது. பல தயாரிப்பாளர்கள் புகாட்டி வேரோன் காரை ஒப்பிட்டு பார்த்தே தங்களது மாடல்களை வடிவமைக்கின்றனர்.

இந்த நிலையில், மார்க்கெட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வேரான் காருக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளை புகாட்டியின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. ஆம், கூடுதல் சக்தி கொண்ட புகாட்டி வேரான் காரை அறிமுகப்படுத்த புகாட்டி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாம்.


சக்தி வாய்ந்த மாடல்

சக்தி வாய்ந்த மாடல்

தற்போது 1,200 குதிரைசக்தி திறன் கொண்ட புகாட்டி வேரோன் காரை இன்னும் சக்தி கொண்டதாக மாற்ற ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாம். எனவே, புதிய மாடல் 1,500 குதிரைசக்தி திறன் கொண்டதாக வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

புதிய புகாட்டி வேரான் கார் இரட்டை எரிபொருள் நுட்பம் கொண்டதாக இருக்கும். இதனால், இதன் சக்தியை எளிதாக 1,500 குதிரைசக்தி கொண்டதாக கூட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐடியா

ஐடியா

ஹைபிரிட் நுட்பத்தின் அடிப்படையில் மெக்லாரன், ஃபெராரி, போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது புதிய கார் மாடல்களை எளிதாக சக்திவாய்ந்த மாடலாக அறிமுகம் செய்துள்ளன. அதே ஃபார்முலாவை பின்பற்றி தற்போது புகாட்டி நிறுவனமும் வேரான் காரின் சக்தியை ஹைபிரிட் நுட்பத்தின் மூலம் கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

சாதனை

சாதனை

தற்போதைய புகாட்டி வேரான் கார் மணிக்கு அதிகபட்சமாக 431 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. எனவே, புதிய மாடல் இந்த வேகத்தைவிட கூடுதலான வேகத்தை தொடுவதற்கான அமைப்புடன் வரும் என தெரிகிறது. அதற்கு தகுந்தாற்போல் காரின் ஏரோடைனமிக்ஸை அதிகரிக்க டிசைனில் சிறிய மாறுதல்கள் செய்யப்படலாம்.

அதிவேக கார்

அதிவேக கார்

புகாட்டி வேரான் காரிடமிருந்து உலகின் அதிவேக தயாரிப்பு மாடல் கார் என்ற பெருமையை ஹென்னிஸி வெனாம் ஜிடி பறித்துக் கொண்டுள்ளது. புகாட்டி கார் மணிக்கு 431கிமீ வேகத்தை தொட்ட நிலையில், ஹென்னிஸி வெனாம் ஜிடி கார் அதிகபட்சமாக மணிக்கு 435.31 கிமீ வேகத்தை தொட்டதாக கூறி டைட்டிலை எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், புதிய புகாட்டி வேரான் கார் மீண்டும் உலகின் அதிவேக தயாரிப்பு மாடல் காராக பெருமையை பெறுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

 புகாட்டி வேரான் சூப்பர்ஸ்போர்ட் - ஒரு பார்வை

புகாட்டி வேரான் சூப்பர்ஸ்போர்ட் - ஒரு பார்வை

எஞ்சின்: 64 வால்வுகள், 16 சிலிண்டர்கள் கொண்ட 8.0 லிட்டர் எஞ்சின்

பவர்: 6,500 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 1,200 பிஎஸ்

டார்க்: 3,000 - 5,000 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 1,500 என்எம்

டிரைவ்: 4 வீல் டிரைவ்

கியர் பாக்ஸ்: 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்

மைலேஜ்: 4.33 கிமீ/லி

Most Read Articles
English summary
The Bugatti Veyron has been the one car whose wow factor hasn't diminished over the almost 10 years of its existence. However, industry sources now say the Veyron is to get even more power, from the current 1,200 horsepower up to around 1,500!
Story first published: Monday, July 14, 2014, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X