இந்த ஆண்டில் ரிலீசாகும் கார் மாடல்கள்: சிறப்பு தொகுப்பு

By Saravana

நாடாளுமன்ற தேர்தல் ஜுரம் மெல்ல குறைந்து வரும் நிலையில், புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக காட்சி கொடுத்த பல புதிய மாடல்களும், இன்னும் சில ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இந்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய கார் மாடல்கள் குறித்த சிறப்பு தொகுப்பாக இந்த செய்தி அமைகிறது. இவை புதிதாக கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


 பட்ஜெட் மாடல்கள்

பட்ஜெட் மாடல்கள்

ரூ.10 லட்சத்தையொட்டிய பட்ஜெட்டிலான கார் மாடல்கள் ஸ்லைடரில் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஒவ்வொரு கார் மாடலாக விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

 டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

பட்ஜெட் விலையில் ஹேட்ச்பேக் கார்களே அருகி வரும் நிலையில், ஒரு 7 சீட்டர் எம்பிவி காரை டட்சன் பிராண்டில் நிசான் அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் தீபாவளி பண்டிகையொட்டி இந்த புதிய எம்பிவி கார் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. முதலில் பெட்ரோல் மாடலிலும், பின்னர் டீசலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகா மற்றும் செவர்லே என்ஜாய் கார்களுக்கு மட்டுமின்றி, சில ஹேட்ச்பேக் கார்களுக்கும் போட்டியை கொடுக்கும்.

எதிர்பார்க்கும் விலை: ரூ.5 லட்சம்

புதிய ஹோண்டா ஜாஸ்

புதிய ஹோண்டா ஜாஸ்

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாடல். ஆனால், இந்திய மாற்றங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை இதுவரை செய்யாததால் அறிமுகத்தை ஹோண்டா தள்ளி போட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.5.5 லட்சம்

 புதிய ஹோண்டா மொபிலியோ

புதிய ஹோண்டா மொபிலியோ

ஹோண்டா கார் நிறுவனத்திடமிருந்து வரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் இது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வர இருக்கிறது. இந்த 7 சீட்டர் எம்பிவி கார் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். இந்த ஆண்டு கடைசி காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.6.5 லட்சம்

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ்

எஸ்எக்ஸ்-4 காருக்கு மாற்றாக மாருதி நிறுவனத்திடமிருந்து வரும் புதிய மிட்சைஸ் செடான் கார் சியாஸ். பெட்ரோல் மற்றும் டீசலில் வரும் இந்த புதிய கார் வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுடன் போட்டிபோடும். எஸ்எக்ஸ்4 காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, இந்த புதிய காரின் உற்பத்தியையும் சோதனை முறையில் மாருதி நடத்திவிட்டது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.7.30 லட்சம்

 டாடா போல்ட்

டாடா போல்ட்

டாடா விஸ்டா காருக்கு மாற்றாக போல்ட் காரை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசலில் வரும் இந்த புதிய கார் பண்டிகை காலத்துக்கு முன்னதாக மார்க்கெட்டுக்கு வந்துவிடும். மாருதி ஸ்விஃப்ட் காரின் மார்க்கெட்டை குறிவைத்து இறக்கப்பட உள்ளது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.4.30 லட்சம்

 டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வரும் புதிய காம்பெக்ட் செடான் கார். 4 மீட்டருக்கும் குறைவாக மிக ஸ்டைலாக இருக்கும் இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் வருகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை: ரூ.5 லட்சம்

ஃபியட் அவென்டியூரா

ஃபியட் அவென்டியூரா

ஃபியட் புன்ட்டோ காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடல். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ, டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் கிராஸ்ஓவர் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.7 லட்சம்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

இந்த ஆண்டு இறுதியில் ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், 4 வீல் டிரைவ் மாடலும் ரெனோ நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.தற்போதைய மாடலைவிட சிறிது கூடுதல் விலையில் வருகிறது.

 ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்

ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்

அஸ்டன் மார்ட்டின் முகப்பு கிரில் டிசைன் கொண்ட ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஃபோர்டு இந்தியா இணையதளத்தில் தரிசனம் கொடுத்துவிட்டது. எனவே, விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் மட்டுமின்றி பல்வேறு கூடுதல் வசதிகளுடன் சரியான விலையில் கொண்டு வருவதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

 நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்

நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்

நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தோற்றத்தில் மாற்றங்களுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது. பெட்ரோல், டீசலில் வரும் இந்த புதிய சன்னி கார் மிட்சைஸ் செடான் கார்கள் மட்டுமின்றி வழக்கம்போல் என்ட்ரிலெவல் செடான் கார்களுக்கும் போட்டியை கொடுக்கும்.

 ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் ஐ20 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலை சுற்று வட்டாரங்கள் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோற்றத்தில் கூடுதல் அழகு சேர்ந்திருக்கும் என்பதோடு, வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கேபினில் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும். புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்

பகிர்ந்து கொள்ளுங்கள்

இந்த ஆண்டு ரிலீசாகும் கார் மாடல்களின் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். தாங்கள் எதிர்பார்க்கும் மாடல் ஏதேனும் இருந்தால் கூறுங்கள், அதன் தகவலை பகிர்ந்துகொள்ளலாம்.

Most Read Articles
English summary
Lets us take a look at some of the upcoming cars that will hit Indian shores in the near future.
Story first published: Friday, May 9, 2014, 11:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X