பாதசாரிகளை அடையாளம் கண்டு பிரேக் பிடிக்கும் ஃபோர்டு தொழில்நுட்பம்!

சாலையின் குறுக்கே வரும் பாதசாரிகளை அடையாளம் கண்டு தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் தொழில்நுட்பத்தை ஃபோர்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

வால்வோ, தெஸ்லா நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனமும் தனது புதிய கார் மாடல்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன்மூலம், விபத்துக்கள் குறைய வழிவகை ஏற்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


 ரேடார்

ரேடார்

காரின் வைன்ட்ஷீல்டில் கேமராவும், பம்பரில் ரேடார் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. சாலையின் குறுக்கே பாதசாரிகள் வருவதை கண்டுணர்ந்து உடனடியாக ஓட்டுனரை எச்சரிக்கும்.

 தானியங்கி பிரேக்

தானியங்கி பிரேக்

எச்சரிக்கை உணர்ந்து டிரைவர் செயல்படாவிட்டால், உடனடியாக தானியங்கி முறையில் பிரேக்கை பிடித்து கார் நிறுத்தப்படும்.

விபத்து குறையும்

விபத்து குறையும்

இந்த புதிய தொழில்நுட்பம் நகர்ப்புற போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கும் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெற்றிகரமாக சோதனை

வெற்றிகரமாக சோதனை

பல்வேறு வித சூழ்நிலைகள் மற்றும் தட்பவெப்ப நிலை கொண்ட சாலைகளில் வைத்து இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட காரை 3 லட்சம் மைல்கள் சோதனை செய்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் கார் மாடல்

முதல் கார் மாடல்

முதல்முறையாக 2015 மாடல் ஃபோர்டு மான்டியோ செடான் காரில் இந்த புதிய தொழில்நுட்பம் ஆப்ஷனல் வசதியாக கொடுக்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Ford, the American based car manufacturer has developed a new technology, where their cars will brake automatically if pedestrians are detected. Following Volvo and Tesla, Ford is next in line to implement this safety feature.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X