வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு

By Saravana

வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வாகன போக்குவரத்தில் பல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, வாகனங்களுக்கு தற்போது இருக்கும் அதிகபட்ச வேக வரம்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேம்பட்டு வரும் சாலை கட்டமைப்பு வசதிகளை கருத்தில்கொண்டு வாகன வகைகளுக்கு தக்கவாறு வேகக்கட்டுப்பாட்டு வரம்பை அதிகரிக்கப்பட உள்ளது.

Duster

கார்களை மணிக்கு 100 கிமீ வேகம் வரை இயக்குவதற்கு அனுமதிக்கப்படும். இதேபோன்று, சரக்கு வாகனங்களை மணிக்கு 80 கிமீ வேகம் வரையிலும், மோட்டார்சைக்கிள்களை மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்வதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் குவாட்ரிசைக்கிள் என்ற புதிய ரக வாகனங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் இயக்குவதற்கு அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு பின் வாகனங்களுக்கான வேக வரம்பு உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The Central government is planning to revise the maximum speed limit of each category of vehicles plying on the roads across the country. 
Story first published: Saturday, August 2, 2014, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X