ஃபோக்ஸ்வேகன் 1.4 லி டிஎஸ்ஐ எஞ்சினுக்கு சிறந்த எஞ்சினுக்கான சர்வதேச விருது!

இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச பெட்ரோல் எஞ்சினுக்கான விருதை ஃபோக்ஸ்வேகன் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ கார் எஞ்சின் பெற்றுள்ளது. தொடர்ந்து 9வது வருடமாக ஃபோக்ஸ்வேகன் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் இந்த விருதை வென்று அசத்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80 ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்கள் அடங்கிய நடுவர் குழு சிறந்த சர்வதேச எஞ்சினுக்கான விருதை பல்வேறு ரகங்களில் தேர்வு செய்து அறிவிக்கிறது.

Volkswagen TSI Engine

நடுவர் குழுவில் இடம்பெறும் பத்திரிக்கையாளர்களின் தனிப்பட்ட ஓட்டுதல் அனுபவம், எரிபொருள் சிக்கனம், எஞ்சின் சப்தம், சக்தி வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த விருதை தேர்வு செய்ததுள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் டிஎஸ்ஐ எஞ்சின் 90 பிஎஸ் முதல் 300 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தும் மாடல்களில் தயாரிக்கப்படுகிறது. இதில், 3 சிலிண்டர் கொண்ட1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் விரைவில் போலோ காரில் பொருத்தி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது 90 பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும். மேலும், சமீபத்தில் உலகின் சிறந்த எஞ்சினுக்கான விருதை வென்ற ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

தற்போது ஃபோக்ஸ்வேகன் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் ஜெட்டா, பஸாத், டிகுவான், டூரன், பீட்டில், கோல்ஃப் கேப்ரியோலெட் உள்ளிட்ட பல மாடல்களில் செயல்புரிந்து வருகிறது

Most Read Articles
English summary
TSI technology from Volkswagen has once again received the 'International Engine of the Year Award': the 1.4 litre TSI twincharger, which won for the ninth time in succession in the 1.0 to 1.4 litre cubic capacity category, is thus the most successful engine in the history of this international competition for engine technology.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X