அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய கார்கள்: ஃபோக்ஸ்வேகனின் அதிரடி திட்டம்

By Saravana

அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்தியாவில் நேரடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ஒரு வழியாக இந்திய மார்க்கெட் பிடிபட்டுள்ளதாக தெரிகிறது.

தனக்கென தனியான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்குவதற்கு பல அதிரடி திட்டங்களையும், வர்த்தக வியூகங்களையும் அந்த நிறுவனம் வகுத்துள்ளது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ளவும், மேம்பாட்டுப் பணிகளை தீவிரமாக்கவும் முடிவு செய்துள்ளது.

2014ல்...

2014ல்...

வரும் ஜூலை மாதம் போலோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் வென்ட்டோ செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த புதிய மாடல்களில் எல்இடி ஹெட்லைட்டுகள், எலக்ட்ரிக் கன்ட்ரோல் ரியர் வியூ கண்ணாடிகள், சிறிய மாற்றத்துடன் கூடிய முகப்பு கிரில், புதிய அலாய் வீல்களுடன் வருகிறது. வென்ட்டோவில் கூடுதல் ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட உள்ளன. இரண்டு கார்களிலும் புதிய 4 சிலிண்டர் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். விலையில் மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ல்...

2015ல்...

அடுத்த ஆண்டு வென்ட்டோவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முகப்பு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். தவிர, பீட்டில் காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவும், புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாம்.

2016ல்...

2016ல்...

2016ம் ஆண்டில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலோ ஸ்டஃப் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய கார் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் எக்ஸென்ட் கார்களுடன் போட்டி போடும். தவிரவும், புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டைகுன் எஸ்யூவி மாடலாக அது இருக்கலாம் என்பது தற்போது உறுதியாக நம்பப்படும் தகவல்.

விலை குறைப்பு

விலை குறைப்பு

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை அதிகமிருக்கிறது. இதற்கு உதிரிபாகங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்து கார் அசெம்பிள் செய்யப்படுவதே ஆகும். எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் 90 சதவீதம் வரையிலான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெற்று கார் உற்பத்தி ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

புதிய முதலீடு

புதிய முதலீடு

இதுவரை இந்தியாவில் ரூ.5,447 கோடியை ஃபோக்ஸ்வேகன் முதலீடு செய்துள்ளது. புதிய கார் மாடல்களின் வருகை மற்றும் உற்பத்தி பிரிவுகளின் திறனை மேம்படுத்துதல் பணிகளுக்காக மேலும் ரூ.801 கோடியை முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய மார்க்கெட்டில் சிறந்த பிராண்டு அந்தஸ்தை பெறுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
Story first published: Monday, May 26, 2014, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X