டைகுன் இல்லை... புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டம்!

By Saravana

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டைகுன் காம்பெக்ட் எஸ்யூவியை ஃபோக்ஸ்வேகன் காட்சிக்கு நிறுத்தியிருந்தது. ஈக்கோஸ்போர்ட் போட்டியாளர் என்பதால், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், டைகுன் எஸ்யூவியை விட்டுவிட்டு புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புதிய எஸ்யூவி மாடல் எது, அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் பார்த்துவிடுவோம்.

புதிய மாடல்

புதிய மாடல்

கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் ஃபோக்ஸ்வேகன் காட்சிக்கு வைத்திருந்த T-Roc என்ற கான்செப்ட் எஸ்யூவி மாடலை காட்சிக்கு வைத்திருந்தது. அதன் அடிப்படையிலான மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது டைகுன் எஸ்யூவியைவிட பல கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டது. அவற்றை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

போலோ, வென்ட்டோ கார்கள் வடிவமைக்கப்பட்ட பழைய PQ25 பிளாட்ஃபார்மில்தான் டைகுன் எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய T-Roc எஸ்யூவி கான்செப்ட் ஃபோக்ஸ்வேகனின் புதிய MQB பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனீவா மோட்டார்ஷோவில் வைக்கப்பட்டிருந்த மாடல் கூரையை மடக்கி விரிக்கும் வசதி கொண்டதாக இருந்ததும் நினைவுகூறத்தக்கது.

ஆலைகளில் மாற்றம்

ஆலைகளில் மாற்றம்

உற்பத்தி செலவீனத்தை குறைக்கும் வகையில், MQB பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படும் பல்வேறு மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து ஆலைகளிலும் மாற்றங்களை செய்ய ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. இந்தியாவிலும் MQB பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படும் கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில், முதலாவதாக T- Roc காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், 19 இஞ்ச் அலாய் வீல்கள், திறந்து மூடும் கூரை உள்ளிட்ட பொதுவான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மாடலில் இதே வசதிகள் இருக்கும் என்று கூற முடியாது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மாடலில் 182 எச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இவை அனைத்தும் பொதுவான தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen India showcased the Taigun at the Auto Expo earlier this year, which was an obvious indication that it would bring this compact SUV here to take on the Renault Duster and Ford EcoSport.
Story first published: Tuesday, April 22, 2014, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X